கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது பாட்டியை
சமையலறையில் இருந்த பூரி கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம்
இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற பேத்தியை
போலீசார் கைது செய்துள்ளனர்.<
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கொலை
குற்றவாளியான ஹர்ஷிதா மைசூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு வயது
19. இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க ஹர்ஷிதா
விரும்பியுள்ளார்.<
பாட்டி ராமரத்னம்மா
அதற்கு அவருக்கு பணம் தேவைப்பட்டு உள்ளது. அவரது பாட்டி ராமரத்னம்மாவை
(வயது 75) சந்தித்து அவரிடம் நிதி உதவி கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த
மே 10ந்தேதி ஹர்ஷிதாவின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். தனியாக இருந்த
பாட்டியை சமையலறையில் இருந்த பூரி கட்டையை கொண்டு ஹர்ஷிதா தாக்கியுள்ளார்.
இதில், பாட்டி படுகாயத்துடன் விழுந்து விட்டார். பின்பு அவரிடம் இருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை சுருட்டி கொண்டு அங்கிருந்து ஹர்ஷிதா தப்பி சென்று விட்டார். அவற்றை நகை கடை ஒன்றில் 1.2 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து உள்ளார்.
நண்பர்களுடன் பார்ட்டி
அதனுடன், அன்று மாலை வேளையில் தனது நண்பர்களுடன் ஹர்ஷிதா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதற்கு ரூ.50 ஆயிரம் பணமும் செலவிட்டுள்ளார். இந்த நிலையில், வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அங்கு காயத்துடன் கிடந்த பாட்டியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
தனியாக இருந்த பாட்டியை தாக்கியதுடன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதால் கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டு இருக்க கூடும் என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், போலீசாரின் விசாரணையில் ஹர்ஷிதா தான் ஒன்றும் அறியாதவள் என்பது போன்று காட்டி கொண்டுள்ளார்.
ஆனால், ஹர்ஷிதாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து ஹர்ஷிதாவை போலீசார் விசாரித்துள்ளனர். அதில், குற்றத்தை ஹர்ஷிதா ஒப்பு கொண்டுள்ளார். அதன் பின் கடந்த ஜூன் 4ந்தேதி போலீசார் ஹர்ஷிதாவை கைது செய்தனர்.
பெற்றோர் தற்கொலை முயற்சி
விவகாரம் அதனுடன் முடியவில்லை. அதற்கு மறுநாள் ஹர்ஷிதாவின் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் ஷிமோகாவில் உள்ள ஓர் ஓட்டலில் பூச்சி கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, ஓட்டல் ஊழியர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
அவர், அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு போக செய்துள்ளார். பாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்ததுடன் தனது நண்பர்களுக்கு பார்ட்டியும் கொடுத்த கொடூரமான இளம்பெண்ணால் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக