ஒரு சொம்பு தூக்கி ஜோதிடனின் பிரடிக்சன் :
ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ( பிரவீன் தயவுல )எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். நேற்று வரை, எதிரிகளாக, எதிர் அணியில் இருந்த பலர், இவரின் தலைமையை ஏற்பர். உடலில் ஆரோக்கியமும், புதிய நம்பிக்கையும் உண்டாகும்.அச்சுறுத்தல்களையும், வழக்குகளையும், எதிர்ப்புகளையும், சமாளிக்கும் சக்தி உண்டாகும். உடன் இருப்பவர்களில், நம்பிக்கை துரோகிகளையும், தவறானவர்களையும், விரட்டி அடிப்பார்.
வரும் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 6:04 மணிக்கு, கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். கடக ராசியில், குரு பகவான் உச்சமாக பிரவேசிக்கும் நேரத்தில், குரு பகவானின் ஆட்சி வீடான தனுசு ராசியில், சந்திரன் சஞ்சரிப்பதுடன், அது, தனுசு லக்னமாகவும் அமைகிறது. இதன் காரணமாக, இந்த குருபெயர்ச்சி, மேலும் சிறப்படைகிறது.குரு பெயர்ச்சியான எட்டாம் நாளே, குரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில், கேது பகவானும், புதன் பகவானின் உச்ச வீடான கன்னியில், ராகு பகவானும், வரும் 21ம் தேதி முதல் சஞ்சரிக்க உள்ளனர்.இந்த நேரத்தில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு, குரு, ராகு, கேது கிரகங்களால் உண்டாகும் பலன்கள் குறித்து, ஜோதிடர்கள் கூறியதாவது: ஏம்பா எல்லோருக்கும் தெரிந்ததைதான் சொல்லியிருக்கீங்க இதை சொல்ல சோதி்டர் எதற்கு எழும்பூர் பெங்களூருக்கு எப்ப போகனும்னு ஒருத்தரும் சொல்லலியே அந்த வழக்குகள் எல்லாம் என்னாகும்
ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலூர்:
பிரதமர் நரேந்திர மோடி: இக்காலத்தில், இவர் தொட்டதெல்லாம் துலங்கும்; நினைத்ததெல்லாம் நடக்கும். பிரதமர் பதவியின் சிறப்பு வெளிப்படும். ஜூன் 21ல் விருச்சிகத்திற்கு, 11ம் வீடான கன்னிக்கு வரும் ராகு பகவானால், சரித்திரம் படைக்கும் வகையில், பலசாதனைகளை படைப்பார்.பாரதத்தை வலிமைமிக்க நாடாக உருவாக்குவார். ஐந்தாம் வீடான குரு வீட்டில், குரு பார்வையுடன் அமர்ந்துள்ள கேது பகவானால், நாட்டை ஆன்மிக வழியில் கொண்டு செல்வார்.
சோனியா: அதிகாரம், செல்வாக்கு, பதவி, பெருமை எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலையுடன், கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாவார். சொந்த கட்சியிலும் எதிர்ப்பு வலுக்கும். கட்சியை காப்பாற்றுவதற்காக, கடுமையாக போராட வேண்டி இருக்கும். நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜெயலலிதா : மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்ப்புகள் எல்லாம் அடங்கும். நேற்று வரை, எதிரிகளாக, எதிர் அணியில் இருந்த பலர், இவரின் தலைமையை ஏற்பர். உடலில் ஆரோக்கியமும், புதிய நம்பிக்கையும் உண்டாகும்.அச்சுறுத்தல்களையும், வழக்குகளையும், எதிர்ப்புகளையும், சமாளிக்கும் சக்தி உண்டாகும். உடன் இருப்பவர்களில், நம்பிக்கை துரோகிகளையும், தவறானவர்களையும், விரட்டி அடிப்பார்.
கருணாநிதி: இப்போதுள்ள நிலையில், மேலும் சரிவு உண்டாகும். நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், துணையாகவும் இருந்தோர், ஒவ்வொருவராக விலகுவர். குடும்பத்திலும், கட்சியிலும் குழப்பம் அதிகரிக்கும். வழக்குகளால் கவனம் சிதறும்.சர்வ வல்லமையுடன், சூழ்ச்சியாலும், சாதுர்யத்தாலும் கோலோச்சி வந்த துரியோதனன், தனது பலத்தை இழந்து, படையை இழந்து, அனைத்தையும் இழந்தது, குரு பகவான் மூன்றில் நின்ற காலத்தில் தான்.ஜூன் 21ல் 5ம் வீட்டிற்கு வரும் ராகு பகவான், பல வகைகளில், சோதனைக்கும், வேதனைக்கும் ஆளாக்குவார். மனைவியாலும், பிள்ளைகளாலும், மனம் பாதிக்கும்.
ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்:
நவக்கிரகங்களில் ராஜ கிரகம் என்று அழைக்கப்படும், குரு உச்சம் பெற்றதால், இந்தியர்களுக்கு, நம் தமிழர்களுக்கு, அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைய உள்ளது. பெண்கள் உயர்ந்த நிலையில் காணப்படுவர். அனைத்து துறைகளிலும், பெண்கள் சாதனை புரிவர்.
பிரதமர் நரேந்திர மோடி: ராசி விருச்சிகம். கட்சி ஜாதகமும் விருச்சிகம். எதிரிகள் செயல் இழந்து விடுவர். இந்த குரு பெயர்ச்சி, கட்சிக்கும், இவருக்கும் வெற்றியை சேர்க்கவல்லது.
ஜெயலலிதா: இவருக்கு 12ம் இடத்தில், குரு அமர்ந்து உச்சம் பெறுவதாலும், இவர் சிம்ம ராசி என்பதாலும், இவர் அதிக வெற்றிகளை பெறுவார்.
கருணாநிதி: இவருக்கு குரு, மூன்றாம் இடத்திற்கு செல்வதால், நன்மை செய்ய மாட்டார். குடும்ப பிரச்னை, அரசியல் குழப்பம் அதிகரிக்கும்.
விஜயகாந்த்: இவரது ராசி துலாம். இவருக்கு ஏழரை சனி நடப்பதால், கட்சி சிதையும் வேதனை உள்ளது.
ராகுல்: இவருக்கு தற்சமயம் குரு இரண்டாம் இடத்தில் உள்ளார். உச்சம் பெற்று உள்ளதால், வெற்றி உண்டாகும்.
ஸ்டாலின்: இவருக்கு குழப்பம் தொடரும். தோல்விகள் பல உண்டு. நிதானம் தேவை.
ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு:
பிரதமர் நரேந்திர மோடி: கட்சியில் உள்ள சில அமைச்சர்களால், சில பாதிப்புகள் ஏற்படும். எதிரிகள் மற்றும் தீவிரவாதத்தால், சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், இவ்வாண்டின் தலை சிறந்த அரசியல் தலைவர்களில், ஒருவராக திகழ வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா: மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், இவரால் மத்திய அரசில் பங்கு வகிக்க முடியாமல் போனதற்கு காரணம், சுய தசையில், சுய புத்தி நடைபெறுவதுதான். இந்த குரு புத்தி, அக்டோபர் 20ம் தேதி முடிந்தவுடன், மத்திய அரசில், இவரின் முயற்சியால், பல அனுகூலங்களை பெறலாம்.
கருணாநிதி: இவருக்கு 2015 பிப்ரவரி மாதம் முதல், சற்று நல்ல நேரம் ஆரம்பம். உடல் ரீதியாக சற்று வைத்தியம் பார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகள், சற்று குறையும், சிலருக்கு நீதிமன்றத்தால், சில பலவீனங்கள் ஏற்பட்டாலும், இவருடைய ஜாதகப்படி, 2015ல் நல்ல நேரம் துவங்குவதால், பிரச்னைகளை சமாளிக்கலாம்.
ராகுல்: 2017 ஜூன் 28ம் தேதியில், சனி புத்தி துவங்கியதும், நல்ல நேரம் துவங்குகிறது. வரும் காலங்களில், இவருடைய பேச்சில், சொல்லில், ஆழ்ந்த தேர்ச்சியும், முதிர்ச்சியும் காணப்படும்.இவ்வாறு, ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக