நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள கிறிஸ்தவ
ஆலயத்தில் நேற்று மாலை நடந்தது. நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா ஆகிய
இருவரும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கிரீடம், பொய் சொல்லப்போறோம், தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை
டைரக்டு செய்தவர், விஜய். இவர், பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன்
ஆவார். நடிகர் உதயாவின் தம்பி. விஜய் டைரக்டு செய்த ‘தெய்வத்திருமகள்,’
‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது
இரண்டு பேருக்கும் இடையே காதல் அரும்பியது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து அமலாபால்-விஜய் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, அமலாபாலின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சியில் நேற்று காலை நடந்தது. கொச்சி ஆலுவா என்ற இடத்தில் உள்ள புனித ஜூட் கிறிஸ்தவ ஆலயத்தில், நேற்று மாலை 4 மணிக்கு அமலாபால்-விஜய் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, அமலாபால்-விஜய் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.
மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா, சரண்யா, பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், அவருடைய மனைவியும், பாடகியுமான சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டு அமலாபால்-விஜய் ஜோடியை வாழ்த்தினார்கள்.
அனைவரையும் பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா ஆகிய இருவரும் வரவேற்றார்கள். அதைத்தொடர்ந்து நெடுமஞ்சேரி என்ற இடத்தில் மலையாள முறைப்படி, ‘சங்கீத்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான மலையாள திரையுலக கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். maalaimalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக