செவ்வாய், 10 ஜூன், 2014

அப்பாவி மோகனம்பாள் கரகாட்டம் ஆடி சுமார் 4 கோடி சம்பாதித்தார் ! இதுவல்லவோ சுயமுன்னேற்றம் ?

வேலூர்: தன்னுடைய வீட்டில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள 4 கோடி ரூபாய் பணம் கரகாட்டம் ஆடியதன் மூலமும்,வட்டிக்கு கொடுத்தும் சம்பாதித்தது என்று கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், வசந்தபுரம் இந்திர நகரை சேர்ந்த கரகாட்ட பெண் மோகனாம்பாள் வீட்டில், 75 சவரன் தங்க நகைகள், 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா ஆகியோர் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியிடம் கொடுத்த மனு விபரம் குறித்து அவர்களுடைய வழக்கறிஞர் பாபுராஜன் கூறியதாவது: ''மோகனாம்பாளும், அவரது குடும்பத்தினரும் கரகாட்டம் ஆடியது மற்றும் அதனால் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டே பணம் சம்பாதித்துள்ளனர்.சீக்கிரமே அவள் விகடன்  சிநேகிதி  போன்ற  பெண்கள் சுயமுன்னேற்ற  வார இதழ்கள்  இந்த  அதி  அபார  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்  நாணயமும் உள்ள மோகனம்பாளை பற்றி எழுதவேண்டும்  , மத்த பொம்பளைங்களும் முன்னேரனும்ல ?
அதனால் சம்பாதித்த பணத்துக்கு ஆதாரங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. மற்றபடி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் வட்டி தொழில் கிடைத்தது தான். இதுதொடர்பான வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கும், தகவல்களையும் அளிக்க தயாராக இருக்கிறோம். மோகனாம்பாளுக்கு வலது கால் முட்டியில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த 29 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 2 ஆம் தேதி காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். மருத்துவமனையில் அவருக்கு உதவியாக நிர்மலா இருந்துள்ளார். காவல்துறையினர் தங்களை தேடி வருவதும், தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்து வருவதால் தாங்களாக முன்வந்து சரணடைந்துள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர்" என்றார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகனாம்பள், இன்று காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது, மோகனாம்பாளை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: