வெள்ளி, 13 ஜூன், 2014

சம்பளம் 3,500 லஞ்சம் 6,000: ரேஷன்கடை அதிகாரிகளின் இமாலய லஞ்சம் ! ஊழியர்களால் நேர்மையாக நடக்கவே முடியாது ! லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் !

அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி ரேஷன் அரிசி கடத்தல் என்பது நடக்காத ஒன்று; மாதம் 3,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்பது கொடுமை தான் என, ரேஷன் கடை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தில், பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் முழு நேர ரேஷன் கடைகள், 8,200 பகுதி நேர ரேஷன் கடைகள் என 33 ஆயிரத்து 200 கடைகள் செயல்படுகின்றன. இதற்கு ஒரே வழி மானியங்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை மக்களின் கையில் நேரடியாக கொடுப்பதுதான் , இதைதான் மன்மோகன் சிங் அரசு மெதுவாக ஆரம்பித்தது , ஊழல் பெருச்சாளிகள் அதை முறியடித்து விடுவார்கள். மானியங்கள் என்று கூறப்படுபவை பெருமுதலாளிகள்  அதிகாரிகள்  அரசியல் வாதிகளின் காமதேனு,  பாஜக மக்களுக்கு  ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்றால் மானியங்களை  நேரடியாக மக்களுக்கு கொடுத்து விடவேண்டும்
இவற்றின் மூலம், கடந்த 2011ல் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 1.98 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இக்கார்டுகளில் எந்த பொருளும் வாங்காத கார்டுகளாக 60 ஆயிரத்து 800 கார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர, போலீசாரின் 61 ஆயிரம் கார்டுகளுக்கு பாதி விலையிலும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இக்கடைகளுக்கு தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இந்திய உணவுக்கழகத்திடம் இருந்து அன்னயோஜனா திட்டத்துக்காக 65ஆயிரத்து 262 மெட்ரிக் டன் அரிசியை கிலோ 3 ரூபாய்க்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கென 5.65ரூபாய் மற்றும் 6.30 ரூபாய்க்கு வாங்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இதேபோல் சர்க்கரை 10 ஆயிரத்து 833 மெட்ரிக் டன்னும், கோதுமை 13 ஆயிரத்து 783 மெட்ரிக் டன்னும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. தவிர குறிப்பிட்ட கார்டுகளுக்கு 3 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை மண்ணெண்ணெயும் முறையாக வழங்கப்படுகிறது. ஆனாலும், ரேஷன் பொருள் விநியோகத்தில் தொடர்ந்து முறைகேடு நடந்து கொண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், இவற்றை மறைக்க மட்டுமல்ல அதிகாரிகளையும், நிர்வாகிகளையும் சரிகட்ட மாதந்தோறும் லஞ்சமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்பது தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாதாந்திர மாமூல் கொடுக்க ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. சில நேரங்களில் ஊழியர்களின் மாதாந்திர ஊதியமும் லஞ்சமாக போய்விடுகிறது.

ரேஷன் கடை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,'' ஊழியர்கள் நல்லவர்களாக, நியாயமானவர்களாக நடந்து கொள்ளவே முடியாது. காரணம், அதிகாரிகள் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி தற்காலிக பணி நீக்கமும், பல ஆயிரம் ரூபாய் இழப்பீடும் கட்டச் சொல்லலாம். அதனால், அதிகாரிகள் கடைகளுக்கு வந்தாலும், வராவிட்டாலும் குறிப்பிட்ட தொகை சென்று விட வேண்டும். சில நேரங்களில் ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பதிலாக மாமூல் அதிகப்படுத்தி வழங்க நிர்பந்தப்படுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு சேர வேண்டிய பொருள்களின் அளவு குறைகிறது. அதாவது ரேஷன் கடைகளில் அதிகாரிகளின் ஆய்வு கூடும்போது, முறைகேடுகள் அதிகமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. எனவே மேலோட்ட ஆய்வுகளை குறைத்து,முறையாக ஆய்வு நடத்த வேண்டும். முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டுமன்றி, அதனால் பயனடையும் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.




கம்ப்யூட்டர் மயம் வருமா?

ஊழியர்களுக்கு உரிய ஊதியம், முற்றிலும் கம்ப்யூட்டர் மயம், எடையாளர் நியமனம், ஆய்வு அதிகாரிகள் குறைப்பு, நுகர்பொரும் வாணிபக்கழகத்தில் இருந்து வரும் பொருள்கள் ஊழியர்களின் முன்பாக எடைபோட்டு தர வேண்டும். பணி நிரந்தரம் , ஏ.டி.எம்.,ல் சம்பளம் பெறுவது, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பது, பென்ஷன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தினால் உண்மையான பொது விநியோகத்திட்டம் கைகொடுக்கும். பொதுமக்களும் உரிய முறையில் பொருள்களை பெற முடியும். இதன்மூலம் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும். பொதுமக்களும் அரசுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: