புதன், 11 ஆகஸ்ட், 2010

உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுத்துறைகளால்புலிகளின்வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள்

புலிகளின் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என்பன தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுத்துறைகளால் குறிவைக்கப்பட்டு வருகின்றன. இவ் வரிசையில் கனடாவில் உள்ள புலிகளின் முதலீடுகளில் ஒன்றான அம்பிகா ஜூவலர்ஸ் என்ற நகைமாளிகை புலனாய்வுதுறையினரால் குறிவைக்கப்பட்டுள்ளதுடன். அவ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கி வருகின்றார்.

இன்னொருவர் இலங்கை ி அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தற்போது அரசுடன் இணைந்து காட்டிகொடுத்துவரும் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் என்பவருடன் இணைந்து செயலாற்றி வருவதுடன். அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட குழுவில் ஒருவராக கனடாவில் இருந்து சென்ற அம்பிகா ஜூவலர்ஸ் நிறுவனத்தின் மிஸிஸாகா கிளை நிறுவனத்தின் அதிபர் பேரின்பநாயகம் இன்பநாயகம் என்பவர் முக்கியமானவர்.
இவ் இன்பநாயகம் என்பவர் கனடாவில் இயங்கிய புலிகளின் முன்னணி அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளராக 1980களின் பிற்பகுதி தொடக்கம் 1990களின் ஆரம்பம்வரை செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: