சனி, 14 ஆகஸ்ட், 2010

வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - அமைச்சர்


வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் ஒருபோதும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் இது பற்றி நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இவ்விடயத்தில் எமது ஜனாதிபதியும் உறுதியாகவுள்ளார் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித  சேனாரட்ன தெரிவித்தார்.

வலைப்பாடு பகுதியில் பூநகரி பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு வலைப்பாடு புனித அன்னம்மாள் பங்குத் தந்தை சில்வெஸ்ரார் அடிகளார் தலைமையில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்விலே உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில் இங்குள்ள மக்கள் 30 வருட கொடிய யுத்தத்தினால் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையி;ல் உள்ளனர். ஏன்னாலான உதவிகளை இவர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன் எனவும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறினார்

மீனவக் குடும்பங்களுக்கு வீட்டுத் திட்ட வசதியும் இவர்களுக்கு ஒரு ஐஸ் தொழிற்சாலை ஒன்றும் செய்து கொடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் அழைப்பின் பேரில் வலைப்பாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐஸ் சேமிப்பு களஞ்சியத்தின் நிர்மான வேலைகளை பார்வையிட்ட பின் அப்பகுதி மீனவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஐஸ் சேமிப்பு களஞ்சியம் கௌரவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே வருகையின் போது தங்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே நிர்மானிக்கப்படுகிறது எனவும் இங்கு வடக்கு பிராந்தியத்தின் கடல்களில் மீன்பிடிப்பதற்கு அப்பிரதேச மீனவர்களுக்கு உரிமையுண்டு இங்கு வேறு எவரும் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு ஒரு போதும் கடற்றொழில் அமைச்சு அனுமதிக்காது என உறுதியாக கூறினார்.

கருத்துகள் இல்லை: