சனி, 14 ஆகஸ்ட், 2010

அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-முதல்வர் ி அறிவுரை

சென்னை: மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் சீர்படும். அதை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது...

உடல் பயிற்சி, மூச்சுப் பயிச்சி, மனவள பயிற்சி ஆகியவற்றின் மூலம் மக்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். உடல்நலத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.

எல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.
பதிவு செய்தவர்: நன்றி
பதிவு செய்தது: 14 Aug 2010 6:04 pm
நல்ல விஷயம் . இப்படி பட்ட காரியத்தை செய்யவும்.

பதிவு செய்தவர்: கமெண்ட் குறித்து
பதிவு செய்தது: 14 Aug 2010 5:47 pm
ஒரு நாளைக்கு ஒரு கமெண்ட் தான் அனுமதியா? அப்படியென்றால் மாடரேட்டர் அதை அறிவிப்பாக செய்ய்யலமே. எதற்காக நாங்கள் மாய்ந்துகொண்டு அடிப்பதும், அது தோன்றாமல் இருப்பதும். it will discourage us to visit your site. news is not a dearer commodity nowadays.

கருத்துகள் இல்லை: