வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஆசிரியை விறகுக்கட்டையை எடுத்து வந்து 11 பேருக்கும் சூடு போட்டார்

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஜமான்ருல் பள்ளி கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் சுருதா கீர்த்தி.
இப்பள்ளியில் 2 மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் சரியாக செய்வதில்லை. சரியாகபாடம் படிப்பதும் இல்லை.

இந்நிலையில் நேற்றும் 11 மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் படிக்காமல் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களிடம் ஏன்படிக்க வில்லை என்று கேட்டதற்கு டி.வி.யில் சினிமா பார்த்ததால் படிக்கவில்லை என்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மதிய உணவு சமையல் கூட அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டையை எடுத்து வந்து 11 பேருக்கும் சூடு போட்டார். இதில் மாணவ- மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனாலும் விட வில்லை. கை, கால், முதுகு போன்ற பகுதிகளில் ஓட ஓட விரட்டி சூடு வைத்தார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் ஓடி வந்து மாணவ-மாணவிகளை மீட்டனர். அவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி மொகராபாத் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சுருதா கீர்த்தியை கைது செய்தனர். கிராமமக்கள் கூறும்போது, தலைமை ஆசிரியையின் கடுமையான தண்டனைக்கு பயந்துதான் எங்க விட்டு குழந்தைகள் பள்ளிக்கு போக மறுக்கின்றன. சுருதாவுக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை: