வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்

சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர். 
அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.

அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான். இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.
தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?

ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.

அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள் ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளை ஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.

அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டும். அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத் தோடு அரசியல் களத்தில் குதியுங்கள் எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள

கருத்துகள் இல்லை: