செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

அதிர்ச்சி காத்திருக்கிறது மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் எச்சரிக்கை!

பொருளாதார அதிர்ச்சி காத்திருக்கிறது மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் எச்சரிக்கை

எதிர்காலத்தில் வித்தியாசமான வடிவங்களில் பொருளாதார ரீதியிலான அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரித்திருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அழுத்தங்கள் ஏற்பட்டாலும் கொள்கை வகுப்பாளர்கள் தமது கொள்கைகளில் பற்றுறுதியுடன் நிற்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தனது கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்ற அழுத்தத்திற்கு மத்திய வங்கி உட்பட்டுள்ளது. வட்டி வீதங்களை உயர்த்திய போது இந்த அழுத்தங்கள் ஏற்பட்டன. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட காலவரையறைக்குள் தனது கொள்கைகள் செயற்பாட்டுத்திறனை ஏற்படுத்துமென்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டுமென கப்ரால் கூறியுள்ளார். கொழும்பில் மத்திய வங்கியாளர்களுக்கான பயிற்சி நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக லங்கா பிசினஸ் ஒன் லைன் செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.
பரும்படியாக்க பொருளாதார மற்றும் நாணயக் கொள்கை முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் பிராந்திய மத்திய வங்கியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் பார்த்திருக்கும் விவகாரங்களைக் கையாளுவதற்கு சரியான முறைமை கிடையாது என்று கப்ரால் கூறியுள்ளார். தவறு ஏற்பட்டிருக்கலாமென நினைத்திருப்போர்கள் சில சமயங்களில் விடயங்கள் தாங்கள் சிந்தித்திருந்தவாறு செயற்படவில்லையெனக் கண்டறிந்து கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் பொருளாதாரத்தை ஆரோக்கியமான முறையில் நிலைநிறுத்திக்கொள்வதற்காக மத்திய வங்கிகளால் கொள்கை ரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அத்துடன், வங்கிக்கு வெளியே உள்ளவர்களால் வித்தியாசமான முறையில் இவை உரைபெயர்க்கப்படும். அவர்கள் பின்னர் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தலை விடுப்பார்கள்.
“வட்டி வீதங்களை அதிகரிக்கும் போது அது வளர்ச்சியைக் கொன்றுவிடப்போவதாக மக்கள் நினைப்பார்கள். ஆனால்இ அந்த நிலைமைக்கு நீங்கள் ஒருபோதும் வரப்போவதில்லை. சிலவேளை அழுத்தங்கள் மிகவும் துரிதமாகவும் மிகவும் நிர்ப்பந்தமாகவும் ஏற்படக்கூடும். அதேவேளைஇ நீங்கள் பக்கவிளைவுகள் தொடர்பாக அறிந்திருந்தால் உங்களுடைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து உறுதியாக பற்றிக்கொள்ள முடியும்மூ27 என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையானது அதிக பணவீக்கம், உயர்மட்ட வட்டி வீதம் என்பவற்றை நீண்டகாலமாகக் கொண்டிருக்கிறது. 2008 இன் நடுப்பகுதியில் பணவீக்கம் 30 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. ஆனால், மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கையினால் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தது. இந்த வருடம் பணவீக்கமும் வட்டி விகிதமும் அதிகளவுக்குக் குறைவடைந்தன. மத்திய வங்கி நாணயக் கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடித்ததால் பணவீக்கம் குறைவடைந்தது.
ஊடகங்கள் வர்த்தகத் துறை மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் வருவதாகக் கூறிய கப்ரால் ஆனால்இ கொள்கை வகுப்பாளர்கள் நாட்டிற்காக அவர்கள் வடிவமைத்திருக்கும் கட்டமைப்புப் பாதையில் உறுதியாக முன்னகர்வை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்ட கொள்கையை கொள்கை வகுப்பாளர்கள் உறுதியாகப் பற்றிப் பிடிக்க வேண்டுமெனவும் இதன் மூலம் இறுதியில் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகிய காலப்பகுதியில் அதிகளவிலான அழுத்தங்கள் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் அவற்றைக் கையாள வேண்டியிருக்கலாம். அதனையே மத்திய வங்கிகள் எதிர்பார்க்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். மேற்குலக பொருளாதாரங்களிலும் பார்க்க ஆசிய நாடுகள் சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்தும் சிறப்பான முறையில் மேலெழுந்து வந்திருப்பதாகவும் எதிர்கால நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு குறித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டுமெனவும் கப்ரால் கூறியுள்ளார்.
அடுத்த சவாலானது வேறுபட்டதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தின் பெரிய பாடங்களில் ஒன்றை கடந்த சில மாதங்களில் நாம் கற்றுக்கொண்டுள்ளோம். அவற்றுக்கான சில வழிமுறைகள் உரிய முறையில் செயற்படுமென்பதே நிச்சயமானதாகும். பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கியமான முறையில் கொண்டுவருவதற்கு கொள்கை ரீதியான நிர்வாகம் தேவைப்படுகிறது. வேறுபட்ட போட்டி நலன்களை சமப்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: