திங்கள், 20 ஜூலை, 2020

தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தினத்தந்தி :  சென்னை, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்திலின்று 354 பேருக்கும், திருவள்ளூரில் 454 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரை 106 பேர், விருதுநகர் 169 பேர், திருவண்ணாமலை 151 பேர், கோவையில் 139 பேர், தூத்துக்குடியில் 200 பேர், திருநெல்வேலியில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று 70 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,861 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,348 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 52,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 19,84,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: