வெள்ளி, 24 ஜூலை, 2020

பெற்றோரைக் கொன்ற தாலிபான்களை சுட்டுக்கொன்ற சிறுமி! ஆப்கனிஸ்தான் .. வீடியோ

மின்னம்பலம் : ஆப்கானிஸ்தானில் பெற்றோரைக் கொன்ற இரண்டு தலிபான் பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்ற சிறுமிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களையும் தலிபான் பயங்கரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்த கமர் குல் என்பவர் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததால், கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு அவர் வீட்டுக்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சிறுமியின் கண்முன்னே அவருடைய பெற்றோரை படுகொலை செய்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர் தம்பியும் அந்தத் துப்பாக்கியை வாங்கி சுட்டதில் மீதமிருந்தவர்கள் தப்பியோடினர்.

சிறுமியின் தீரச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சிறுமியும் அவர் தம்பியும் இருக்கும் புகைப்படம் வைரலானது. தற்போது அவரும் அவர் தம்பியும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்

கருத்துகள் இல்லை: