வெள்ளி, 24 ஜூலை, 2020

உயிருடன் இருந்தபோது சோறு போடாத பாவிகள்... "மன்னிச்சிருங்கப்பா.. அம்மா"..

elderly couple committed suicide near chennai due to povertytamil.oneindia.com - hemavandhana : சென்னை: பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. "எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது" என்று ஒரு லெட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டனர்.. எனினும் மகன்கள் கதறி கதறி அழுததால், அவர்களிடம் பெற்றோர் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.
சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. அவர்கள் 2பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய்விட்டனர்.. கடைசி மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால் பெற்றோருடனே வசித்து வந்தார்.
ஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு காசு தராமல் இருந்திருக்கிறார்.. பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. இதனால் பசியை அவர்களால் சமாளிக்க முடியாமல், வயதான காலத்தில் செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்

இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. அதனால் அந்த வேலையும் பறிபோனது.. இதனால் வறுமை அவர்களை வாட்டியது.. பசி அவர்களை துரத்தியது.. கடைசியில் 2 பேரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்... இந்த தகவல் கிடைத்ததும், செம்பியம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் ஒரு லெட்டர் கிடைத்தது.. அதை தற்கொலைக்கு முன்பு 2 பேரும் எழுதி வைத்திருந்தனர்.
"நாங்க சாவதற்கு யாரும் காரணமில்லை.. ஆனால், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளி போட வேணாம்.. எங்கள் சடலத்தை அனாதை பிணங்களாக அடக்கம் செய்துவிடுங்கள்.. எங்களை போலீசார்தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தனர்.. இதையடுத்து, 2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனஇதையடுத்து, அவர்களது ஆசைப்படியே உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், சடலங்கள் அடக்கம் செய்யப்படும் என்று போலீசாரும் தெரிவித்திருந்தனர். பசியால் இறந்ததையும், சாகும்போதுகூட பெற்ற பிள்ளைகளை அம்மாவும், அப்பாவும் காட்டி தராமல் இருந்ததையும் கண்டு தமிழகமே அதிர்ந்தது.
2 பேரின் சடலங்களும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு போலீசார் அதை பெற்று கொண்டனர்.. ஆனால், தங்கள் பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் 3 பேரும் கதறி கதறி அழுதனர்.. அதனால் போலீசார் அவர்களிடம் சடலங்களை ஒப்படைத்தனர். சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் போலீசார் மரியாதை செய்தனர்.. அந்த 3 மகன்கள் முன்னிலையில் உடல்கள் எரியூட்டப்பட்டன

கருத்துகள் இல்லை: