திங்கள், 20 ஜூலை, 2020

கோடீஸ்வர மாரியும், கொடி பிடிக்கும் ரஜினியும்.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : : ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வரலாறை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெரியும்.   அவர்களின் நோக்கம் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது. ஆப்கானிஸ்தான் முதல் நேபாள் வரை அகண்ட இந்து சாம்ராஜ்யம் அமைப்பது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவது.
இவ்வாறு மாற்றியபிறகு இந்து சனாதன தர்மத்தை நிறுவுவது.  சமஸ்கிருதத்தை தேசிய மொழி ஆக்குவது. பிற, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் அழித்து இந்து சனாதனத்தை இந்தியர்கள் அனைவரும் பின்பற்றுமாறு செய்வது.   இதற்கு இவர்களுக்கு பெரும் தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.   இதை நீக்குவதே இவர்களின் இறுதி லட்சியம்.   இந்த லட்சியத்தை நோக்கியே, இவர்கள் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள்.  இந்த லட்சியத்தை அடைய, இவர்கள் எத்தகைய தந்திரத்தையும் கையாள தயங்க மாட்டார்கள்.
இந்த லட்சியத்தை அடைவதற்காக இவர்கள் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணிப்பார்கள்.   ஒரு வெறியோடு பணியாற்றுவார்கள்.   கர்நாடக மாநிலத்தில் ஒரு மூத்த அதிகாரி பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அவர் பணிபுரிந்த இடத்தில், 80 வயதுடைய ஒரு முதியவர் இருந்தார். அந்த முதியவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்.  அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.  ஒரு பழைய சைக்கிளில், அந்த பகுதி முழுக்க பயணம் செய்வார். அவருக்கென்று உடைமைகளோ, சொத்துக்களோ கிடையாது.

அந்த முதியவர் இந்த அதிகாரியை சந்தித்து, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகள் மற்றும், பல நேரங்களில், இஸ்லாமியர்கள் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்றும், புகார்களோடு வருவார்.  ஒரு ஓய்வான நாளில், இந்த அதிகாரி, அம்முதியவரை பார்த்து, “நீங்கள் நினைக்கும் இந்து ராஜ்யம் உங்கள் வாழ்நாளில் அமையாவிட்டால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்.  அதற்கு அந்த முதியவர்,  என் வாழ்நாளில் இது அமையாமல் போனால் நான் கவலைப்பட மாட்டேன்.  எனக்கு பின்னால் உள்ள சந்ததியினர் இதை செய்வார்கள்.   இந்த இயக்கத்தை தொடங்கிய தலைவர்கள் இவ்வாறு நினைத்திருந்தால், இன்று மோடி ஆட்சியை பிடித்திருக்க மாட்டார்.   என் வாழ்நாள் முழுக்க இதற்காக உழைப்பேன்” என்று பதில் சொன்னாராம் அந்த முதியவர்.   இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலம்.  சளைக்காமல் உழைப்பார்கள்.   இந்த அர்ப்பணிப்பு கம்யூனிஸ்டுகளிடம் இல்லாமல் போனது வருத்தமே.
வட இந்தியாவில், பெரும்பாலான பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிடி வலுவாகியுள்ளது.  அவர்கள் நினைத்ததை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.   காவல் துறையில் ஊடுறுவியுள்ளார்கள்.   நீதித் துறையில் ஊடுறுவியுள்ளார்கள்.  இந்தி ஆங்கிலம், பிற பிராந்திய மொழிகள் என்று இந்திய ஊடகங்கள் அனைத்திலும் ஊடுறுவியுள்ளார்கள்.    ஆனால், தமிழக ஊடகங்களில் பெருமளவில் அவர்களால் ஊடுறுவ முடியவில்லை. மலையாளத்திலும்.  இதற்கு காரணம், 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் இருக்கும் பெரியார் மற்றும் திராவிட அரசியலின் வீச்சு.
பார்ப்பனர்களை தவிர்த்து பிற சாதியினர் அனைவரும் பெரியாரை படிக்காமல் வளந்திருக்க முடியாது.  மில்லினியெல்ஸ் இதற்கு விதிவிலக்கு.   பார்ப்பனர் குடும்பங்களில் மட்டுமே, குழந்தை முதல், பெரியாரை பற்றி பேசாதே, படிக்காதே.  இன்று நம் சமூகம் இப்படி இருப்பதற்கு காரணம் பெரியார்தான் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார்கள்.  எனக்கு தெரிந்த பார்ப்பன குடும்பங்களில், பெரியார் பற்றிய பாடத்தை படிக்காதே என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருவதை நான் பார்த்திருக்கிறேன்.
பார்ப்பனர்களை தவிர்த்து இதர அனைத்து சமூகத்தினரும் பெரியாரை மதிக்கின்றனர்.   இவர்களில் 95 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   பெரியார் ஏன் பார்ப்பனர்களை எதிர்த்தார் ?  பெரியார் ஏன் இந்து கடவுள்களை எதிர்த்தார் ?  ஒருவனை ஒரு மதம் தாழ்ந்த சாதி, தீண்டத்தகாதவன் என்கிறது.  அவன் தன்னை தீண்டத்தகாதவன் என்பதை ஏற்றுக் கொள்கிறான். அவ்வாறு ஏற்றுக்கொள்வதை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்கிறான்.  அந்த கடவுளையே அடிக்கிறேன் என்றுதான் பெரியார் தன் பிரச்சாரத்தை தொடங்கினார்.  பெரியாருக்கும் கடவுளுக்கும் சொத்துத் தகராறா என்ன ?  இல்லாத கடவுளோடு சண்டை போட பெரியார் அந்த அளவுகு அறிவில்லாதவரா என்ன ? இதை புரிந்து கொண்டால் பெரியாரை புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, பெரியார் மீது மரியாதை இருப்பவர்கள் இன்று ஊடகங்களில் நிறைந்துள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கருதுகிறது. அவர்கள்தான், வெகுஜன ஊடகங்களில் இந்துத்துவா பிரச்சாரத்தை செய்ய முடியாமல் தடுக்கிறார்கள்.   வட இந்திய ஊடகங்களை காவிமயமாக்கியது போல, தமிழக ஊடகங்களை கவி மயமாக்க முடியவில்லை என்பதை ஆர்.எஸ்.எஸ் உணர்ந்தே, மாரிதாஸ் போன்ற நபர்களை களமிறக்கி விட்டுள்ளது.
யார் மாரிதாஸ் ?
மாரிதாஸின் ஆரம்ப காலம், அவர் எப்படிப்பட்ட ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை, தோழர் சூர்யா சேவியர் ஒரு நீண்ட வீடியோவில் விளக்கியுள்ளார்.   அதை தவிர்த்து மீதம் உள்ளவைகளை நாம் பேசுவோம்.
மாரிதாஸ், தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களை போலவே பி.இ படித்தார், பின்னர் எம்.இ படிக்கிறார்.   மென்பொருள் வேலைக்கு செல்லாமல்,  தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்கிறார்.   அங்கே அவர் மீது உள்ள சில குற்றச்சாட்டுகளால், பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
பின்னர் நண்பர்களோடு சேர்ந்து அவர் தொடங்கியதுதான் Hone Traders என்ற ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம்.  மார்ச் 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்குகிறார் மாரி.
மாரிக்கு இரண்டு சகோதரர்கள்.  மூத்த சகோதரர் மகேஷ், திருபுவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மதுரை தியாகராயர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படிக்கிறார்.  பின்னர் பிஎட். முடிக்கிறார்.   ஒரு தனியார் பள்ளியில் சிறிது காலம், ஆசிரியராக பணியாற்றுகிறார். பின்னர் இவரும் மாரியும்  சேர்ந்துதான்  Honey Traders ஏற்றுமதி நிறுவனம் தொடங்குகிறார்.
இந்த நிறுவனத்தை மாரியோடு சேர்ந்து தொடங்குபவர்கள்
1) எட்வின்
2) விக்னேஷ்
3) வினோத்.
எட்வின் இந்நிறுவனத்தில், Assistant Manager cum CRM Lead.  விக்னேஷ் இந்நிறுவனத்தில் Production Manager cum Assitant Director.  வினோத் இந்நிறுவனத்தில், Assistant Director and Executive Manager.    மாரியின் சகோதரர் மகேஷ் இந்நிறுவனத்தின் Managing Director.   மாரிதாஸ் இந்நிறுவனத்தில்  Purchasing & Executive Manager.
இந்நிறுவனம், திண்டுக்கல், ஆர்த்தி தியேட்டர் ரோடு, வ.உ.சி தெரு என்ற முகவரியில் இயங்கி வந்தது.   Honey Traders நிறுவனத்தின்
PAN CARD NO : AAHFH7557G  இந்நிறுவனம் ஐ.சி.ஐ.சி. ஐ வங்கியில் 605805500244 என்ற எண்ணில் கணக்கு வைத்திருந்தது.
இந்நிறுவனத்தை தொடங்க இவருக்கு உதவி செய்த நண்பர்களை இவர் ஏமாற்றி விட்டார் என்று ஒரு தகவல் உள்ளது.  ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை.
மாரிதாஸ் ஹனி ட்ரேடர்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் நடத்திய சமயத்தில், அலிபாபா என்ற சீன நிறுவனத்தில் அவர் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்ய விரும்பி அவர்களை அணுகுகிறார்.   ஒரு கட்டத்தில், அந்த சீன நிறுவனத்திடம், நான் நேரில் வந்து உங்களிடம் எங்கள் ஆயத்த ஆடைகள் மற்றும் எங்களது சர்வீஸ் தரம் பற்றி நேரில் விளக்க வாய்ப்பு கொடுங்கள்.   வருவதற்கு எனக்கு விமான டிக்கட் எடுத்து தாருங்கள் என்று அலிபாபா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.  உலகத்திலேயே, க்ளையண்ட்டிடம், க்ளையண்ட்டை பார்ப்பதற்கு டிக்கட் காசு கேட்ட ஒரே சேல்ஸ் எக்சியூட்டீவ் மாரிதாசாகத்தான் இருப்பார்.    இதுதான் மாரிதாஸுக்கு 2015 காலகட்டத்தில் இருந்த அறிவும், பொருளாதார வசதியும்.


2016 கால கட்டத்தில், இந்த Honey Traders நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.  மாரியின் மூத்த சகோதரர் மகேஷ், வெறும் 3 லட்ச ரூபாய் பணம் இல்லாமல், ஒரு செக் மோசடி வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு அலைகிறார்.  இதுதான் மாரிதாஸ் குடும்பத்தின் பொருளாதார நிலைமை.
Honey Traders இறுதியாக செப்டம்பர் 2016ல் மூடப்படுகிறது.  இதன் தமிழ்நாடு வணிகவரி பதிவு ரத்து செய்யப்படுகிறது.

இத்தகைய மோசமான, வறுமையான பொருளாதார சூழலில்தான் மாரிதாஸ் குடும்பம் வாழ்ந்து வருகிறது.  படையப்பா படத்தில், ரஜினிக்கு அவர் நிலத்தில் க்ரானைட் மலை கிடைக்கும்.   கிடைத்ததும், பத்தே நிமிடத்தில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று காட்சி வரும்.
அது போல மாரி குடும்பத்தாருக்கு ஒரு க்ரானைட் மலை போல, ஏதோ ஒன்று கிடைத்துள்ளது.  மாரியின் சகோதரர் மகேஷ், மதுரை அண்ணா நகரில் ஒரு வாடகை வீட்டில், மகேஷ் மில்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை தொடங்குகிறார்.

மதுரையில், மாரிதாஸ் சகோதரர் மாபெரும் தொழில் நிறுவனமான மகேஷ் மில்ஸ் நடந்த வீடு. இப்போது இதை காலி செய்து விட்டார்கள்.
29 டிசம்பர் 2017 அன்று மாரி குடும்பத்தினர், மதுரை தள்ளாக்குளத்தில் 2070 அடி மனையில் கட்டப்பட்ட ஒரு பெரிய வீட்டை வாங்குகின்றனர்.  பத்திர பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டபடி அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 72,50,000/-   சந்தை மதிப்பின்படி, அந்த வீடு வாங்கப்படுகையில், அதன் மதிப்பு 1.20 கோடி என்கிறார்கள், மதுரையில் இந்த வீடு அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள்.   இந்த வீடு வாங்குவதற்காக மதுரை பஜாஜ் பைனான்ஸில் 57,75,000 கடன் பெற்று இந்த வீட்டை வாங்கியுள்ளனர் மாரியின் குடும்பத்தார்.

மாரிதாஸ் வீடு வாங்கியது தொடர்பான ஆவணம்.
இந்த வீடு நான்கு பேர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  1) அமுதா, 2) மகேஷ் குமார் 3) சதீஷ் குமார் மற்றும் மாரிதாஸ்.   மாரியின் தாயார் அமுதா பணிக்கு செல்பவர் இல்லை.  மாரியின் ஒரு சகோதரர் மகேஷ் பற்றி பார்த்தோம்.
மாரிதாஸின் இளைய சகோதரர் சதீஷ், பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை.   பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.   சில காலம் சில்லரை வேலைகளை செய்கிறார்.  இன்று வரை அவருக்கு நிரந்தரமான வேலை இல்லை.
மாரிதாஸுக்கு முழுநேர வேலையில்லை.   ஒரு சகோதரர் மகேஷ் ஏற்கனவே தொழில் தொடங்கி கடும் நஷ்டத்தில் இருப்பவர்.  இளைய சகோதரர் சதீஷுக்கு வேலையே இல்லை.
இப்படி இருக்கையில், 1.20 கோடிக்கு மாரிதாஸ் குடும்பத்தாரால் எப்படி வீடு வாங்க முடிந்தது ?   வருமானமே இல்லாத ஒரு குடும்பத்துக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தார் 57.50 லட்சத்தை எப்படி கடனாக தூக்கிக் கொடுத்தார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.

மாரிதாஸ் சகோதரர் மகேஷ். இவர்தான் திடீர் தொழில் அதிபர்
இது மட்டும் அல்ல.  மாரியின் சகோதரர் மகேஷ், தற்போது, “சதீஷ் டெனிம் இன்க்” என்ற ஒரு புதிய நிறுவனத்தை மதுரை, அண்ணா நகரில் நடத்தி வருகிறார்.  இந்த கட்டிடம் மதுரையின் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறது.  இந்த கட்டிடம், மதுரையில், விக்ரம் பாலிடெக்னிக், விக்ரம் மருத்துவமனை நடத்தி வரும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமானது.  இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் மாத வாடகை 1.30 லட்சத்தை தாண்டும்.29 டிசம்பர் 2017ல் ஒரு கோடியே இருபது லட்சத்துக்கு மாரி வீடு வாங்குகிறாரா !!   பிப்ரவரி 2018ல், மாரிதாஸ் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார்.  “நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்” என்பதே அந்த புத்தகம்.   மாரியைப் போல ஆயிரம் பேர் புத்தகத்தை எழுதுவார்கள்.   ஆனால் மாரியின் பெயர் எப்படி தெரிந்தது என்றால், மாரியை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.   புத்தகம் வெளியான சில நாட்களில் மாரிதாஸ் இந்த புத்தகத்தை ரஜினிக்கு அளித்து புகைப்படம் வெளியிடுகிறார்.

இதன் பிறகுதான் மாரிதாஸ் கவனம் பெறுகிறார்.   இரண்டே இரண்டு மாதங்கள் கழித்து மாரிதாஸ் தனது யூ ட்யூப் சேனலை ஏப்ரல் 2018ல் தொடங்குகிறார்.

இரண்டு மாதங்களில், வலதுசாரி / ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இணையதளமான, ஸ்வராஜ்யா மேக் பத்திரிக்கை, மோடி மற்றும் ரஜினியை ஆதரிக்கும் ஒன்மேன் ஆர்மி என்று மாரிதாஸை வார்ணித்து கட்டுரை வெளியிடுகிறது. அக்கட்டுரையில் மேலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இணைப்பு
Meet M Maridhas, a native of Madurai in Tamil Nadu, who is single-handedly taking on these elements or “poralis”, as he terms them.
A post-graduate in engineering, Maridhas regrets that allegations are being made so thick and fast in Tamil Nadu that it is leading to people swinging to just one side – against the BJP and Modi – without ascertaining facts.
அந்த சேனல் தொடங்கப்பட்ட பின்னர்தான், திராவிட கட்சிகள் மீது கடுமையான தாக்குதல்.  மாரிதாஸ் போன்றோரின் தாக்குதல்கள், திமுகவை குறிவைத்தே இருக்கும்.   ஏனெனில்,  ஜெயலலிதா இல்லாத அதிமுக ஏறக்குறைய பிஜேபியின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே எதிரி திமுகவே.
மாரிதாஸ் தொடங்கிய யூ.ட்யூப் சேனல் மற்றும், ட்விட்டருக்கு கொடுக்கப்பட்ட ஈமெயில் முகவரி, சிங்கப்பூரில் வசிக்கும் ப்ரியா என்ற பெண்ணுக்கு சொந்தமானது. அந்த பிரியா தான் நடத்தும் இணையதளத்தில் தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.


I live by the principles of Sanatana Dharma. I have interests in Hinduism, its philosophy and etc. I actively pursue studies in Hindu scriptures and prepare material for teaching as well. I hope to specialise in Mahabharatha and Bhagavad Gita.
இணைப்பு
நான் சனாதன தர்மக் கொள்கைகளின்படி வாழ்பவள் என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.  இந்த பிரியா, தொடர்ந்து மாரிதாஸின் யூ ட்யூப் சேனல்கள் மற்றும் எழுத்துக்களை பரப்பி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், திருபுவனத்தில் பிறந்த ஒரு மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனை, வளர்த்தெடுத்து, நிதி அளித்து, இன்று 70 ஆண்டுகால திராவிட அரசியலை கேள்விக்குள்ளாக்கும், விவாதமாக்கும் வகையில் ஒரு பிம்பமாக கட்டமைப்பது அத்தனை எளிதல்ல.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வீச்சு. பெரியார் மற்றும் திராவிட சிந்தனைகள், தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ளது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகவே புரிந்து வைத்து உள்ளது.   இதை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும் என்பதே இவர்கள் திட்டம்.  அந்த திட்டத்தின் ஒரு புள்ளியே மாரிதாஸ்.
மாரிதாஸ் திடீரென்று நியூஸ்18 குணசேகரன், புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் ஆகியோரு மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.  நான் இது ஒரு பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்றே இதை கணித்தேன்.   The Federal  இணைய தளத்துக்கு அளித்த பேட்டியிலும் இதையே கூறினேன்.
ஜூன் 2018ல்,  ஸ்வராஜ்ய மேக் இணைய இதழுக்கு, அப்போது பிரபலமாகாத மாரிதாஸ் அளித்த பேட்டியில் என்ன கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.

He is also critical of the media’s handling of certain issues, where they play up some cases and turn a deaf ear to others. “The death of a Dalit or Muslim or anyone belonging to any caste or religion is painful. Communal and caste clashes are a shame to the nation. But what is the media doing?” he asks, pointing out that it seeks a response from Modi if a girl is killed in Kashmir but remain relatively quiet if a similar thing happens to a Hindu girl in Delhi.
Nationally, the media is oriented towards the left, while in Tamil Nadu it is under the control of Dravidians and Periyarists, he alleges, adding that most of the educational institutions, which are owned by the Centre, are being controlled by leftists.
“The leftists are trying to wrest control of the nation’s administration through trade unions,” Maridhas charges.
I consider (such) media organisations as another type of terrorists. How can we accept when they put out headlines like ‘Two Dalits beaten to death in BJP-ruled state’? (What) If a similar things happens in Kerala?” Maridhas wonders, adding that initially his writings were scientifically based.
“You need courage to tell that you will come up with spiritual politics in Tamil Nadu where separatists, Periyar organisations, leftist extremism, and Dravidian parties have reared their heads,”
. இத்தகைய ஆர்.எஸ்.எஸ்சின் சதித் திட்டங்களின் ஒரு பகுதியே தமிழக ஊடகங்கள் மீதான தாக்குதல்.  இந்த சதித் திட்டத்தில் ரஜினிகாந்தும் அடங்கியிருக்கிறார்.
இது போல மறைமுகமாக மோடிக்கும், இந்துத்துவா அரசியலுக்கும் ஆதரவு தருபவர்கள் வழக்கமாக சொல்வது “நான் பிஜேபியோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ அல்ல.  எனக்கு தேஷம் நன்றாக இருக்க வேண்டும்” என்பதே.  ரஜினியும் இதைத்தானே சொல்கிறார் ?  மாரிதாஸும், ரங்கராஜ் பாண்டேக்களும் இதைத்தானே சொல்கிறார்கள் ?  இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு கூறே.
ரஜினி, ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என்பது உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.   ரஜினி தனது பெயரை யாரும் தவறாக பயன்படுத்துவதை விரும்பாதவர்.  ரஜினியின் பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்த அவர் அனுமதித்த ஒரே நபர் தமிழருவி மணியன்.  ஒரு கட்டத்தில் என் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று மணியனிடம் சொல்லி விட்டார்.
ரஜினி தன் பெயரால் கூட்டம் நடத்த ரஜினி அனுமதித்த ஒரே மற்றொரு நபர் இந்த மாரிதாஸ்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, ரஜினி தன்னை நம்புகிறார்.  ரஜினிக்கு ஒரே ஆலோசகர் நான் தான் என்று மாரிதாஸ் வசூலில் இறங்கியுள்ளது ரஜினிக்கு தெரியாது.   இப்படி தவறான நபர்களை நம்பித்தான் ரஜினி இன்று முட்டு சந்தில் நிற்கிறார்.
மாரிதாஸுக்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ். அடுத்த புள்ளியை களமிறக்க உள்ளது.  அவர் பெயர் அண்ணாமலை.  கர்நாடகத்தில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிதான் இந்த அண்ணாமலை.  இவரையும் ஆர்.எஸ்.எஸ் விரைவில் களமிறக்க உள்ளது.

இந்த முரட்டு சங்கி, விரைவில், தேசியம், நாட்டுப் பற்று, நாட்டு மாடு என்று, மறைமுக பிஜேபி ஆதரவுக்கு களமிறங்குவார்.
இது போல, ஆர்.எஸ்.எஸ் ரஜினிகாந்துகளாகவும், ரங்கராஜ் பாண்டேக்களாகவும், மாரிதாஸ்களாகவும், அண்ணாமலைகளாகவும் தமிழகத்தை 2021 தேர்தலுக்கு முன் வெட்டுக்கிளிகளைப் போல படையெடுக்க உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள இடதுசாரிகள், மற்றும் ஜனநாயக சக்திகள் இதை எதிர்க்க என்ன செய்யப் போகிறார்கள் என்பதே கேள்வி.

கருத்துகள் இல்லை: