வெள்ளி, 24 ஜூலை, 2020

ஈ பாஸ் இல்லாமல் ரஜினி லம்போர்கினி பயணம் ..

Rebel Ravi : · முந்தாநாள் 5 கோடி ரூவா லம்போர்கினிய..எளிமையா அவரே ஓட்டினாருன்னு.. பப்லிசிட்டி. வேற .
தன்னோட பண்ணை வீட்டுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் போன இவர் 65+ வயதானவர்... இப்படிப்பட்டோர் அநாவசியமாக வெளியே போகாதீர் எனப் பிரதமர் கெஞ்சுகிறார்..
ஆனால் ரஜினி  போனார்.. ஈ பாஸ் எடுத்தாரா என எல்லோரும் கேட்டனர்..
உலக உத்தமன் வேடம் போடும்..இந்தக் கஞ்சமகாப்ரபு..கபட வேடதாரி...
இன்று ஈ பாஸ் எடுக்கிறார் அன்று போனதற்கு...அதுவும் மெடிக்கல் எமர்ஜென்சி எனப் பொய் கூறி..எடப்பாடியை விடக் கேவலமான பிறவி. இது சார் மாதிரி ஒரு யோக்கியனை ஈ லோகத்தில் பார்க்க இயலுமோ?
முந்தாநாள் போனதற்கு இன்றைக்கு ஈ பாஸ் எடுத்து இருக்கிறார்
Poovannan Ganapathy. : ஈ பாஸ்.
ரஜினிகாந்த் அவர்களின் ஈபாஸ் பார்த்ததால் இந்த பதிவு. இந்த கொரோனா காலகட்டத்தில் அரசும் போல்சியும் நடத்தும் சாடிஸ வெறியாட்டத்தில் இந்த ஈபாஸ் க்கு முக்கிய பங்கு இருக்கிறது.

காஞ்சிபுரம் தாண்டி செய்யாறு செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் என் சித்தி வசிக்கிறார். உடன் மாற்றுத் திறனாளி மகள். மகன் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு சமையல் arayil வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று தலையில் தையல் போடப்பட்டது.இங்கிருந்து மகன் அவர் குடும்பத்தோடு சென்று தாயோடு வாசிக்க, அவர் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனே சென்னைக்கு அழித்து வர ஏதுவாக வாகனத்தில் செல்ல ஈ பாஸ் க்கு விண்ணப்பித்தார்.
நடந்த நிகழ்வுகள் மற்றும் சித்தியின் உடல்நல குறைபாட்டுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் என அனைத்தையும் எழுதி மகனுக்குத் தாயைச் சென்று பார்த்து, அவசியம் ஏற்பட்டால் உடனே மருத்துவத்திற்காகச் சென்னை கொண்டு வர வேண்டிய அவசியத்தை விளக்கி மருத்துவ சான்றிதழ் அளித்தேன்.
ஈ பாஸ் நிராகரிக்கப்பட்டது.இதனைத் தான் இத்தனை அதிகாரிகளும் , ஆட்சியில் இருப்பவர்களும், காவல்துறையினரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதித்து உள்ளார்கள்.
மாற்றுத் திறனாளி மகளோடு தனியாகக் கிராமத்தில் வாழும் 68 வயதான தாயை, அவரின் காயத்துக்குச் சிகிச்சை அளிக்க , உடனிருந்து பார்த்துக் கொள்ள விண்ணப்பித்த , விண்ணப்பத்துக்கு ஆதரவாக இவற்றினை எழுதித் தந்த ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவரின் சான்றிதழைத் தூக்கி குப்பையில் போட்டு ஈ-பாஸ் நிராகரிக்கப்பட்டது என்ற குறுந்தகவலை அளிப்பதைத் தான் இந்த அரசு மக்களுக்கான அரசு செய்தது.
அதனால் ரஜினிக்குக் கிடைத்த ஈ பாஸ் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிலருக்காவது அரசு பயன் தருவது மகிழ்ச்சி தானே.!


 லஞ்சியார்  :எம்மதமும் சம்மதமாம்..
கந்தசிஷ்டிகவசம் குறித்த வீடியோ கண்டனத்தையும், தமிழக அரசின் நடவடிக்கையும் பாராட்டியிருக்கிறார்..
கடவுளை நிந்தனை செய்வதை ஏற்கமுடியாது என ரஜினி வாய்மலர்ந்திருக்கிறார்
அவரின் கொள்கையில் கோட்பாட்டில் நமக்கு விரோதமில்லை.. பொதுவாழ்வில் தான் வந்துதான் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென நம்பிக்கைக்கொண்டிருக்கும் அரைவேக்காடு சில உண்மைகளை கண்டு மௌனமாய் நகர்ந்து போவதேன் ..
..
திடீரென இந்த பல்லி கத்தும் ..
NEW INDIA BORN என ஒரு நாள் கத்தியது ..
திடீரென இரவில் மக்கள் கையில் வைத்திருந்த காசெல்லாம் செல்லாதென அறிவித்த கோமாளித்தனத்தை இந்த கோமாளி வரவேற்று புகழ்ந்து தள்ளியது .. ஆனால் CAA சட்ட திருத்தத்தை எதிர்த்தோ ஆதரித்தோ பேசாது கள்ளமௌனம் காக்கும் .. இங்கேயே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களை இரண்டாம் நிலைக்கு தள்ளநினைத்து பாசிச அரசின் செயல்பாட்டை கண்டிக்க துப்பில்லை கடைசியில் இஸ்லாமியருக்கு இழப்பென்றால் நானே வருவேன் என சொல்லும்.. கடந்த நான்காண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி தடுக்கபட்டதை ..48642 இந்து மாணவர்களின் மேற்படிப்பு தடைபட்டதை இவர் வாய்திறந்து கண்டித்ததுண்டா..
தமிழகத்தில் BC MBC 70% விழுக்காடு
இந்திய அளவில் 52%. விழுக்காடு
அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்து லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்த பாசிச பிஜேபி அரசை ஏன் எதிர்த்து வாய்திறக்கவில்லை
கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த பாஜக PM CARE குறித்து இந்த நடிகர் வாய் திறக்காததேன் ..சிஸ்டம் சரியில்லையென சரிசெய்ய முனைப்புகாட்டும் இந்த #புனிதன்
தணிக்கைக்குட்படுத்தாமல் கொள்ளையடிக்கலாம் அதைக்கொண்டு ஆட்சியை கலைக்க எம்எல்ஏக்களை விலைபேசலாம் என்ற அயோக்கியத்தனத்தை கண்டித்ததுண்டா..?
..
எம்மதமும் சம்மதம் என்கிறவர் நபிகளார் பற்றிய கார்ட்டூன் குறித்து ஏன் கண்டிக்கவில்லை.. கந்தன் வேறு சுப்ரமணியன் வேறு என சொன்ன ஆன்மீகவாதி சுகி.சிவத்தை குதறுகிறார்களே .. இந்த இமயமலை ஆன்மீகவாதி ஏன் கண்டிக்கவில்லை
தன்னை நியாவனாக காட்டிக்கொள்ளும் இவர் தேசத்தின் மீது அளப்பரிய நேசத்தை காட்டும் இவர் ஒழுங்காக வரி செலுத்துவதாக சொல்லும் இவர் இவரின் சம்பளத்தை எவ்வளவு படத்திற்கு வாங்குகிறேன் என வெளிப்படையாக சொல்லி வரி செலுத்தியதுண்டா .. அரிதாரம் பூசி மெய்காப்பாளன் வேச போடலாம் பொதுவெளியில் அதுவும் பகுத்தாயும் தமிழ் மண்ணில் சமூகநீதியும் தமிழுணர்வும் உள்ள மண்ணில் வேசங்கள் எடுபடாது ..
போலிகளை அடையாளம் காணும் அறிவு தமிழ் மண்ணுக்குண்டு .. அரசியலுக்கு துணிவு வேண்டும் அதெல்லாம் ரஜினியிடம் கிடையாது
அதெற்கெல்லாம் நீ சரிபடமாட்டே என்ற வடிவேலு பட காமெடிதான் நினைவிற்கு வருகிறது ..
என்னதான் அரிதாரம் பூசி மறைத்தாலும்
வெளுக்கதான் செய்யும் ரஜினியின் உண்மையான நிறம் எல்லோரும் அறிவார்கள்
பாசிசத்தின் குரலை மட்டுமே ஒலிக்கும் இவர் ..
வெளிப்படையாக பாஜகவில் சேரலாம் ..

கருத்துகள் இல்லை: