tamil.oneindia.com - VelmuruganP :
சென்னை:
கொரோனா அதிகரித்த காரணத்தால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய
சொல்லிவிட்டு சென்னையில் செயல்பட்டு வந்த பல ஐ.டி நிறுவனங்கள் அலுவலகத்தை
காலி செய்துவிட்டன. இதனால் சென்னை ஓஎம்ஆர் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
வானுயுர்ந்த ஐடி கட்டிடங்கள் ஆள் இல்லாமல காற்று வாங்குகின்றன. 25K. 20K என்று வாடகை வாங்கிய வீட்டு ஓனர்கள் இப்போது மொத்தமாக வீடுகள் காலியாக கிடப்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். சென்னை முழுக்க ஏராளமான வீடுகளில் டூலெட் போர்டு தொங்குகிறது
சென்னை நகரில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. கட்டிட தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் நிலத்தின் மதிப்பும் சரியும் அபாயமும் உள்ளது. ஒரு வேளை நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால் கற்பனைக்கும் அப்பாற்றப்ப்டட வீழ்ச்சியை சென்னை சந்திக்கும்.
அலுவலகங்கள் காலி!
சென்னையில் செயல்பட்டு வந்த பல ஐடி நிறவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு மார்ச் மாதம் அறிவுறுத்தின. இந்த முறையில் நல்ல பலன் கிடைத்ததால் பல ஐடி நிறுவனங்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டன, ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை ஓஎம்ஆர் சாலை ( பழைய மகாபலிபுரம் சாலை) இப்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலும் சுத்தமாக இல்லை.
வங்கி கடன் நெருக்கடி
ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு சென்ற ஐடி ஊழியர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பவுது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் சென்னையில் ஏராளமான வீடுகள் காலியாகி உள்ளன. குறைந்த வாடகைக்கும் ஆட்கள் யாரும் வராதததால் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிய வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் ஓஎம்ஆர் சாலை முழுவதுமே வாடகையை அடிப்படையாகக் கொண்டு தான் நிறைய வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.இப்போது ஊழியர்கள் எல்லோரும் work from homeக்கு சென்றுவிட்டதால் வீடுகளில் குடியேற யாரும் முன்வரவில்லை. இதனால் வாங்கி கடனை கட்ட முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். வங்கிகளும் கடனை கட்டுமாறு நெருக்குவதால் செய்வதாறியது திகைப்பில் உள்ளனர்.
நிறுவனங்களும் ஹேப்பி
மென்பொருள் நிறுவனங்களின் இந்த செயலால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி பூங்காவில் கிட்டத்தட்ட 10லட்சம் சதுர அடி காலியாக உள்ளது. அதேநேரம் work from home முறையால் ஊழியர்கள் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. அத்துடன் நிறுவனங்களில் செலவும் குறைந்துள்ளது. ஐடி பணியாளர்களுக்கும் நிறைய செலவு மிச்சமாகி உள்ளது. இப்போது புதிய தீர்வாக work from home முறை போய் கொண்டிருக்கிறது.
சென்னை நிலை கேள்விக்குறி< ஐடி ஊழியர்கள், ஐடி நிறுவனங்கள் பயன் அடைந்தாலும் சென்னை ஓஎம்ஆர் சாலையில் கட்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல அடுக்குமாடி கட்டிடங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் ஐடி பூங்காக்களும் என்ன செய்வது என்று தவித்து வருகின்றன. கொரோனாவால ஏற்பட்ட இந்த மாற்றம் சென்னை ரியல் எஸ்டேட் தொழியை தடுமாற வைத்துள்ளது. மென்பொருள் நிறுவனங்களுக்காக கட்டப்பப்பட்ட கட்டுமானங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலும் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பலரையும் பாதிக்கும்
இது வெறும் ரியல் எஸ்டேட் தொழிலை மட்டுமல்ல, ஆம்னி பேருந்து சேவைகள், ஓஎம்ஆர் சாலையில் ஐடி ஊழியர்களை நம்பி உள்ள உணவகங்கள், வர்த்தக கடைகள், ஷாப்பிங் மால்கள், ஜவுளி தொழில் நிறுவனங்கள் என சங்கிலித்தொடராக அனைத்து தொழில்களில ும்மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போதைய முடக்கம் தொடர்ந்தால் சென்னை ஓஎம்ஆர் பகுதியின் நிலை மோசமாகிவிடும்.கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து பழைய நிலைதிரும்பினாலும் வொர்க் ப்ரம் ஹோக் கலாச்சாரத்தால் சென்னை ஓஎம்ஆரில் பழைய நிலை திரும்புவது சிக்கல் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக