திங்கள், 20 ஜூலை, 2020

ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் மருத்துவர் உயிரிழப்பு ..தற்கொலை?

tatmil.indianexpress.com" ; பணிச்சுமை காரணமாக கண்ணன் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இளம் மருத்துவர் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வந்தவர் மாணவர் கண்ணன். இவருக்கு வயது 25.
பணிச்சுமை காரணமாக கண்ணன் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நேற்று இரவு வரையிலும் கொரோனா வார்டு பணியைக் கவனித்திருக்கிறார்.தற்கொலை குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து, “தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும்” என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற,  மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 ஆகிய எண்களுக்கு அழைக்கவும்

கருத்துகள் இல்லை: