ஞாயிறு, 19 ஜூலை, 2020

கந்த சஷ்டி கவச வரலாறு ... ஏன் கருவறைக்குள் அது செல்லவில்லை?

கந்த சஷ்டிக் கவசம்!
அதன் பொருட்டு இவ்வளவு குதிப்போர்கள் வருந்துவோரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க!
ஏன் அவ்ளோ பெருமை மிக்க தமிழ் கந்த சஷ்டி கவசத்தை முருகன் கோயில் கருவறையில் ஓத மாட்டேங்குறாங்க பிராமணாள்!!!
சஷ்டி கவசத்திலேயே பீஜாஷார மந்திரம் எல்லாம் இருக்கு என ஊருக்கு உபதேசம் பண்ணுறவா, கருவறையில் ஓத மறுப்பது ஏன்?
தமிழ்க் கடவுள் முருகன் மேல் பாடப்பட்டுள்ள சமஸ்கிருதம் கலந்த, கந்த சஷ்டிக் கவசம் மொத்தம் 6!
தெரியுமா துதிப்போர்க்கு குதிப்போர்க்கு?
இன்று பிரபலமாகி விட்ட கவசம், செந்தூர் முருகன் மீதானது!
அது தவிர, இன்னும் 5 கவசங்கள் உள்ளன!
ஆனால் எந்த கவசமும் கருவறைக்குள் போக முடியாது!
கந்த சஷ்டிக் கவசம் மிகவும் தொன்மையான முருகன் பாடலோ? இல்லை!
19ஆம் நூற்றாண்டில் ஒரு பெங்களூருக்காரர் எழுதியது பெயர் பாலன் தேவராயன் சுவாமிகள் வல்லூரில் பிறந்து பெங்களூரில் செட்டில் ஆனவர்!
பிறப்பால் பார்ப்பனர் அல்லர்! இப்போ புரியுதா  ஏன் கவசம், கருவறைக்குள் போகலைன்னு?
கந்த சஷ்டிக் கவசம் நீங்கள் பிழையாக நினைப்பது போல் பக்தியால் பரப்பப்படுவது போல தொன்மையான தமிழ் அல்ல!

1940 களில் கவசம் தமிழ் முருகன் மேல் எழுதப்பட்டது அல்ல!
கவசம் வடக்கில் இருந்து வந்த சுப்ரமண்யன் மேல் எழுதப்பட்டது!
அன்று, பிரபலம் ஆகவில்லை
எப்படி, திடீரென்று தமிழகத்தில் பிரபலம் ஆனது!!!
கந்த சஷ்டிக் கவசத்தை.. பலரும் பாடியுள்ளார்கள்! சீர்காழி முதல் மகாநதி ஷோபனா வரை!
ஆனால்.. சூலமங்கலம் சகோதரிகள் போல்
ஓர் இசை வெற்றி, யாருக்கும் கிட்டவில்லை!
பெண்மைக் குரலே ஆயினும், கம்பீரக் குரல்!!!
கந்த சஷ்டிக் கவச வரலாறு ஆத்திகர்களுக்கும் தெரியலை நாத்திகர்களுக்கும் தெரியலை ஆனால் அதன் மேல், ஏதோ மந்திர சக்தி இருப்பதாக அண்மைக் காலப் பார்ப்பனீயம் கதை கட்டி விட்டது!
மந்திர சக்தி இருப்பின் கருவறையில் சொல்லலாமே ஓய்?
கருவறைக்குள் Only Brahmins & Sanskrit மட்டுமே!
சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருந்தாலும்,
தமிழ் நீச பாஷையே!!!
அதை எப்படி ஓய், மூலஸ்தானம் கருவறைக்குள்?
7ம் நூற்றாண்டில் பாடிய தேவாரமே, சிதம்பர அம்பலம் ஏறலை!
20ம் நூற்றாண்டில் பாடிய கந்த சஷ்டிக் கவசம் ஏறுமோ?
சூத்திரப் பக்தர்களை "உசுப்பி" விட
கந்த சஷ்டிக் கவசம் பயன்படுத்திப்போம்!
ஆனால் பழக்க வழக்கமெலாம் வாசலோட இருக்கணும்!
கருவறை மூலஸ்தானத்துள் வந்துறப்படாது!
ஏதோ குருட்டாம் போக்குல
சூலமங்கலம் இசையால் பிரபலம் ஆயிடுத்து!
அதுக்காக..
சஷ்டிக் கவசம், கருவறைக்குள் வரமுடியாது ஓய்!!
சஷ்டி கவசம் சக்தி வாய்ந்த பீஜாக்ஷர மந்திரம் எனில் அதை
பெண்கள் சொல்லவே கூடாது!!!
சூத்திரர்கள் காதில் விழவே கூடாது!
கருவறையில் ஓதலாமே!!!
தமிழ் முருக அன்பர்களே..
பார்ப்பான் வலை விழாதீர்கள்!
சப்பிப் போட்ட கொட்டையாய், எறிந்து விடுவான்!
உங்கள் முருகனின் சஷ்டிக் கவசமே
இதுவரை கருவறை ஏறவில்லை! இனியும் ஏறாது!!!
தமிழ் சமூகமே அறிவு கொள்க!
தமிழ் முருகன் மேல் அன்பு கொள்க!
போலியான பக்தியில் கண்மூடி
பார்ப்பான் அழித்த
திருச்செந்தூர் முருகனின் முகம் போல்,
நீங்களும் தேய்ந்து விடாதீர்கள்
கருப்பர் கூட்டம் காணொளி மேல்...
எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடு இல்லை!
முருகன் என்பதால் அல்ல!
அவர்களின் பிழையான அணுகுமுறையால்!
புராண கதைகளில் ஆபாசங்கள் பல உள்ளன!
அதை மக்களுக்கு விளக்கும் போது
அந்த ஆபாசத்தை..
நீங்களே உங்கள்மேல் பூசிக்கொள்ளக் கூடாது!
ஆரிய ஆபாசம் திராவிட ஆபாசமாய்
மக்கள் மனத்தில் தேங்கி விடாதபடி விளக்கணும்
நீங்களே கையிலெடுத்துப் பூசிக்கக் கூடாது!
அண்ணா/ பெரியார் முதல்
கலைவாணர்/ எம். ஆர். ராதா கலைஞர் வரை
ஒருவர் கூட ஆபாசமாகப் பேசாமலேயே
மக்களுக்கு விளக்கிய பான்மை உண்டு!
திராவிட நோக்கம்
மக்களுக்கு ஆரியக் குப்பை அறியத் தந்து மக்களை ஆரிய மாயையில் இருந்து மீண்டெழச்செய்வது.
ஆரிய சுழ்ச்சியை சரிவர அறியாது
ஆபாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று
ஆபாசத்தை, ஆபாசமாகத் துழாவினால்
ஆரியத்தில் உள்ள ஆபாசம் ஒளிந்து கொண்டு திராவிடம் தான் ஆபாசம்!
என மாயத் தோற்றம் மக்களிடத்தே ஏற்படுத்தும்.
திராவிடத்தின் நோக்கம் சமூகநீதி!!! சமூக நீதியின் நோக்கம் ஆரிய ஆபாசங்களை, மக்களுக்கு உணர்த்தி
தமிழ் மக்களை, ஆரிய மாயையிலிருந்து மீட்பதே!
உடன்பிறப்புகள் மற்றும் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

கருத்துகள் இல்லை: