ஞாயிறு, 19 ஜூலை, 2020

தமிழக அரசு மருத்துவ கட்டமைப்பின் இமாலய சாதனை! ஒருங்கிணைந்த முன்னேற்றம் .

Sivasankaran Saravanan : மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தவறுதலாக வெடிமருந்தை எடுத்து வெடித்து அவரது முகம் சிதைந்துபோன செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
கிட்டத்தட்ட முற்றிலும் சிதைந்துபோன அந்த முகத்தை பார்ப்பதற்கு மன தைரியம் வேண்டும் தவிர மிக
கோரமான காயங்களுடன் சிதைந்த முகத்தை பதிவிட்டால், பேஸ்புக் அதை வன்முறை என்ற கணக்கில் அனுமதிக்காது. எனவே அந்த படத்தை இங்கே தரவில்லை.
முற்றிலும் சிதைந்த அவரது முகத்தை உடனடி அறுவைசிகிச்சை மூலம் சீரமைப்பது என்பது மிகப்பெரிய மருத்துவ சவால். சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறை, ENT துறை மற்றும் பல் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த Facio maxillary துறை என அறுவைசிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழு இந்த அறுவைசிகிச்சையை ஒருங்கிணைந்து வெற்றிகரமாக செய்துள்ளனர். அறுவைசிகிச்சைக்கு பின்னர் அவரது முகத்தை பார்க்கும்போது இது எவ்வளவு பெரிய சாதனை என்று அனைவருக்கும் தெரியும்.
மருத்துவ உலகில் இது அரிதினும் அரிதான ஒரு அறுவைசிகிச்சை சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுவும் தற்போதைய கோவிட் சூழ்நிலையில் இத்தகைய ஒரு அறுவைசிகிச்சையை நினைத்துப்பாருங்கள். தனியாரில் பல லட்சங்கள் செலவாக கூடிய இந்த கூட்டு அறுவைசிகிச்சையை சென்னை அரசு மருத்துவக்கல்லூரி இலவசமாக செய்துள்ளனர். பணம் செலவழித்தால் கூட தனியார் மருத்துவமனையில் இது சாத்தியம் இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி + ENT + Facio maxillary என ஒரே நேரத்தில் இத்தகைய கூட்டு ஒருங்கிணைப்பு என்பது தனியார் மருத்துவமனையில் சாத்தியமில்லை.


இந்த மாபெரும் மருத்துவ வரலாற்றுச்சாதனை என்பது சென்னை மருத்துவக்கல்லூரி மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல். அரிதினும் அரிதான இந்த சாதனையை படைத்த , சென்னை மருத்துவக்கல்லூரி பிளாஸ்டிக் சர்ஜரி துறை பேராசிரியை டாக்டர். ரஷீதா பேகம் (Dr.Rasheedha Begum) உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவிற்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!
சர்ஜரிக்கு முன் மற்றும் சர்ஜரிக்கு பின் புகைப்படங்களை கமென்ட் பகுதியில் தந்துள்ளேன். Disturbing images

கருத்துகள் இல்லை: