வெள்ளி, 24 ஜூலை, 2020

வெறும் வயிற்றில் காலை நேர உணவாக சாப்பிடக்கூடாத உணவுகள் எவை...?

Empty stomachவெப்துனியா :காலையில் முதல் உணவாக இருப்பதால், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நம் உடலை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். இல்லையெனில் ஒருவர் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும்.
இரவு வெகுநேரம் உணவு உண்ணாமல் உறங்குவதால், ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி, டீ பருகினால், இரைப்பையில்  அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி  குடிக்கலாம்.இளம் சூடான நீர் - காலையில் காபி/டீக்கு பதிலாக இளம் சூடான தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும், கழிவுகள் வெளியேறும், நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும், சருமம் இளமையாகும், புத்துணர்வு கிடைக்கும், செரிமானம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். யில் எரிச்சல் ஏற்படுத்தும்.

உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும். நட்ஸ் - பாதாம்  போன்ற கொட்டைகளை இரவு ஊறவைத்து, காலையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும்.


;பெர்ரி பழங்கள்- ப்ளூபெர்ரி போன்ற பழங்களை காலையில் உண்ணும்போது, நியாபக சக்தி அதிகரிக்கும், மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.கிவி, ஆப்பிள்,  தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்ற பழங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இவற்றை எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும். தேன்- காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு பலம் தரும். தேனோடு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகும். வயிற்று  எரிச்சலை குறைக்கும்.

;தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை  உண்டாக்கும்.
வெந்தயம் - இரவு வெந்தயத்தை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

கருத்துகள் இல்லை: