செவ்வாய், 21 ஜூலை, 2020

புது சேரியில் கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

MK Stalin thanks to Puducherry CM Narayanasamy
Puducherry Budget Session, Governor Bedi, Lt Governor Bedi, Puducherry, புதுச்சேரி கவர்னர் - முதல்வர் மோதல்:  விடிய, விடிய நடந்த கடிதப் போர்tamil.oneindia.com mathivanan-maran. : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுவையில் மாணவர்களுக்காக காலை டிபன் வழங்கும் திட்டத்தை அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு புரட்சி முதல்வர் என புகழாரம் சூட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் இல்லாமலேயே பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்தது சர்ச்சையாகி உள்ளது.
இதனிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், புதுவையில் மாணவர்கள் அனைவருக்கும் கலைஞர் கருணாநிதி பெயரில் காலை டிபன் - சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒரு அறிவிப்பு.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது

கலைத் தொண்டு மூலமாக 'கலைஞர் கழகம்' வளர்த்த புதுவையில் 'புரட்சி முதல்வர்' திரு. @VNarayanasami அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!


தினமலர்  : புதுச்சேரி ; கவர்னர் - முதல்வர் இடையிலான கடிதப் போர் அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.கவர்னர் கிரண்பேடி நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
கடிதத்தில், 'பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் (துறைவாரியான நிதி ஒதுக்கீடு) குறித்த விபரங்கள் எனக்கு அனுப்பப்படவில்லை. இது, விதிமீறலாகும். பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் விபரங்களையும் அனுப்பினால் வேறு தேதியை முடிவு செய்து, நான் உரையாற்றுகிறேன்; பட்ஜெட் தாக்கலும் செய்யலாம்' என தெரிவித்து இருந்தார்.அதிகாலை 3:30 மணிஇதற்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி நள்ளிரவில் எழுதிய கடிதத்தில், 'பட்ஜெட் தொடர்பான கோப்பு உங்களது(கவர்னர்) ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நீங்கள் ஒப்புதல் அளித்த பிறகே, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
பட்ஜெட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்துள்ள தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் உங்களிடம் பட்ஜெட் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. மான்யக் கோரிக்கைகள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்த பிறகே அனுப்ப முடியும். இதில் விதிமீறல் எதுவும் கிடையாது. மரபுப்படி கவர்னர் உரையாற்ற வர வேண்டும்' என, தெரிவித்து இருந்தார்.


இந்த கடிதம் அதிகாலை 3:30 மணியளவில் ராஜ்நிவாசுக்கு சென்று சேர்ந்துள்ளது.தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், 'எதிர்கால செலவினங்களை பற்றி திட்டமிடாமல், எந்தந்த துறைக்கு, எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்ற விபரங்களை முடிவு செய்யாமல், எப்படி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்? அனுமதி பெற்றுதான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்ஜெட் விபரங்களையும், மான்யக் கோரிக்கைகளையும் அனுப்ப வேண்டும். அப்போதுதான் அதற்கு ஒப்புதல் தந்து, கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கலுக்கு புதிய தேதியை முடிவு செய்யலாம்' என தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் முதல்வரை நேற்று காலை வந்தடைந்தது.தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காலையில் ஆரம்பித்து, இரவு வரை சமூக வலைதளங்களில் கவர்னர் தனது கருத்துக்களை பதிவு செய்தவாறு இருந்தார்.சம்பளம் கிடைக்குமா? சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ பேட்டியில் கவர்னர் கூறும்போது, 'சட்டம் மற்றும் விதிகளின்படி முதல்வரிடம் இருக்கும் பட்ஜெட் கோப்புகள் எனக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.

நமது சம்பளம், செலவுகள், ஓய்வூதியங்கள் போன்றவை ஆகஸ்ட் முதல் பாதிக்கப்படும். கவர்னர் மீதோ அல்லது இந்திய அரசு மீதோ குற்றம் சுமத்தக் கூடாது.கவர்னர் தாமதப்படுத்தியதாக முதல்வரோ, அமைச்சர்களோ குற்றஞ்சாட்டினால் அது தவறான செய்தியாகும். சட்டம் மற்றும் விதிகளின் கீழ், ஜனாதிபதியிடம் இருந்து பெறப்பட்ட பட்ஜெட் கோப்பை அவர் ஏன் இதுவரை எனக்கு அனுப்பவில்லை. நான் விதிகள் மற்றும் சட்டத்தை எழுதவில்லை. யூனியன் பிரதேச சட்டம் மற்றும் அலுவல் விதிகளை நாங்கள் அறிந்துள்ளோம்.எனவே, தாமதம் இங்கே இல்லை. உண்மையற்ற குற்றச்சாட்டுகளை எதையும் உள்நோக்கத்துடன் மக்கள் மத்தியில் பரப்ப கூடாது' என தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை: