செவ்வாய், 21 ஜூலை, 2020

கேரளா: `யு.ஏ.இ தூதரக பார்சல்; 13 முறை; 230 கிலோ தங்கம்!’ –

இவர்களும் முக்கிய சந்தேக நபர் சிவசங்கரும் பார்ப்பனர்கள்
vikatan.com- சிந்து ஆர் : தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில்
முக்கிய குற்றவாளியான பைசல் ஃபரீத் துபாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டுவந்து விசாராணை நடத்த என்.ஐ.ஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கடத்தல்காரர்களின் நெட்வெர்க்கை ஆதிமுதல் அந்தம் வரை கண்டறிய என்.ஐ.ஏ மற்றும் சுங்க அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை நடந்த விசாரணையில் துபாயில் இருந்து பைசல் ஃபரீத் என்பவர் தங்கம் கடத்தும் பார்சலை யு.ஏ.இ தூதரகத்தின் பெயரில் அனுப்பி வைப்பதாகவும். யு.ஏ.இ தூதரக முன்னாள் பி.ஆர்.ஓ ஸரித் அந்த பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்வார்.

பின்னர் அங்கிருந்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் மூலம் ரமீஸ் என்பவரிடம் தங்கம் சென்று சேரும். ரமீஸ் அந்தத் தங்கத்தை ஜலால் உள்ளிட்ட சிலர் மூலம் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளைச் சேர்ந்த சில நகைக்கடைகளுக்கு சப்ளை செய்துவிடுவார். இந்த வழக்கில் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ரமீஸ், ஜலால் உள்ளிட்ட நகைக்கடைகளுக்கு தங்கம் சப்ளை செய்யும் சிலர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பைசல் ஃபரீத் துபாயில் இருக்கிறார். அவரை கைது செய்து இந்தியா அழைத்து வர என்.ஐ.ஏ தீவிரம் காட்டியது. இதைத் தொடர்ந்து துபாய் போலீஸாரால் பைசல் ஃபரீத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டு வந்து விசாராணை நடத்த என்.ஐ.ஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
;
இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம், `தங்கம் சப்ளை செய்வதாக ஜலால் உள்ளிட்டவர்கள் நகைக்கடை உரிமையாளர்கள் சிலரை அணுகுவார்கள். அதற்கு ஒப்புக்கொள்ளுபவர்களிடம் இருந்து முன்பணம் வாங்கி அதை ரமீஸ் மூலம் துபாயில் இருக்கும் பைசல் ஃபரீத்துக்கு அனுப்பி வைப்பார்கள். பைசல் ஃபரீத், பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கத்தை வாங்கி தூதரக பார்சல் போன்று அனுப்புவார். இதில் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தங்கம் கடத்த உதவியுள்ளார்கள்’ என்பது தெரியவந்திருக்கிறது.
இதுவரை இவர்கள் 230 கிலோ தங்கம் கடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஜூலை மாதம் முதல் இவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்துவதற்கு முன்பாக 30 கிலோ அளவில் எடையுள்ள வீட்டு உபயோக பொருள்களை அனுப்பி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர்.

அதன் பிறகு, மொத்தம் இதுவரை 23 முறை தூதரகம் பார்சல் அனுப்பியுள்ளனர். அதில் 13 முறை தங்கம் கடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், தூதரகத்துக்கு வந்த பார்சலின் எடை உள்ளிட்டவைகளை சரிபார்த்து 230 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதில் 3.7 கிலோ தங்கம் கோழிக்கோட்டில் ஒரு நகைக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 96.3 கிலோ நகைகள் எங்கு சென்றது என விசாரணை நடந்து வருகிறது. விகடன் .com</

கருத்துகள் இல்லை: