( file video) இலக்கிய : ஜோர்தான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும்
தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணை
தந்தை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடியிருப்பில் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அவரை, துரத்தி வந்த தந்தை சிமென்ட் கட்டையால் தலையை குறிவைத்து தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அஹ்லம், இறக்கும் வரை அந்த நபரால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
மரண பயத்தில் அஹ்லம் அலறியதைக் கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
அஹ்லம் அவரது தாயாரிடம், கெஞ்சியும் அந்த தாயார் சிலையாக நின்றிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த தந்தையை தடுத்து நிறுத்த சிலர் முயன்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுகின்றனர்.
இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார்,
மகளின் சடலத்தின் அருகே தேநீர் அருந்தியபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு அதிர்ந்துள்ளனர்.
அஹ்லம் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோர்தான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஆணவக்கொலை எனவும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் சமூக ஊடகங்களில் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக