திங்கள், 20 ஜூலை, 2020

கொரோனா ..பிரேசிலை முந்திய இந்தியா, மரணத்தில் அமெரிக்காவையும் விஞ்சியது!

corona cases in worldwide : 14.4M conformed, 8.08M recovered tamil.oneindia.com : உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,96,855 ஆக உயர்ந்துள்ளது, அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,99,896 ஆக உயர்ந்துள்ளது. 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,18,107 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே மிக அதிகபட்சமாக பிரேசிலில் நேற்று கொரோனாவால் ஒரே நாளில் 716 பேர் பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 675 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் 528 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 392 பேர் பலியாகி உள்ளனர்.

உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 63,584 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவால் 24,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அங்கு 6,109 பேருக்கு தொற்று ஒரு நாளில் உறுதியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை 771,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,342 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: