செவ்வாய், 21 ஜூலை, 2020

சீமானை கடுமையாக எச்சரித்த நடிகை விஜயலட்சுமி .. தகாத வார்த்தைகளின் அர்ச்சனை .. வீடியோ


 ரமேஷ் சுப்பு : :  நடிகை விஜயலட்சுமி  மிகவும்  மனம் குழம்பி உள்ளார்.  இது சாதாரண மனிதர்களின் உள்வீட்டு பிரச்சனை என்று ஒதுங்கி போய்விட முடியாது . உள்வீட்டு பிரச்சனை என்றாலும் கூட மனித உரிமை மீறல் அளவுக்கு சென்றால் அது பொதுப்பிரச்சனை ஆகிவிடுகிறது.
இவர் குற்றம் சாட்டுவது ஒரு சாதாரண மனிதர் மீது அல்ல! .
ஒரு வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சியின் தலைவர் மீது !
விஜயலட்சுமி  முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை.
இது வரையில் சீமான் விஜயலட்சுமிக்கு இழைத்த கொடுமைகளை ஒரு வேளை மறந்து மன்னித்து விடலாம் என்று கருதி விட முடியாது!
ஏனெனில் நடிகை விஜலட்சுமியின் உயிருக்கு  ஆபத்து உள்ளது  போல தெரிகிறது .
இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடந்திவிட்டு ஏமாற்றி விட்டு ஓடிவிட்டார் சீமான் .
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படும் போது சீமானின் அரசியல் வாழ்வு  முடிவுக்கு வந்துவிடும் நிலை உள்ளது.
இதன் காரணமாகவே வேறு யாரும்கூட இந்த சிக்கலில் சீமானை மாட்டி விட்டுவிட்டு சீமானின் கட்சியை கபளீகரம் செய்யலாம் அல்லவா?
ஏனெனில் சீமானின் அரசியல் ஒன்றும் கொள்கை சார்ந்தது அல்ல . வெறும் வசூலை நோக்கமாக கொண்ட புலி பிரசார அரசியல் .
அதில் வசூல் மட்டுமே உண்டு .
எந்தவித பொறுப்புணர்ச்சியும் அற்று வாயில் வந்ததை அள்ளி வீசலாம் . வருவது எல்லாமே வருமானம்தான்.
கடந்த சில ஆண்டுகளாக நடிகை விஜலட்சுமி கூக்குரல் போட்டுக்கொண்டே இருக்கிறார் .
ஆனால் ஒருவரும் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இதுதான் ஆபத்தானது . சீமானின் செல்வாக்கு பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.
அத்தனை பார்பன ஊடகங்களும் சீமானின் பிரசார பீரங்கிகளாக செயல்படுகின்றன.

தினத்தந்தி மாலைமுரசு  தந்தி டிவி போன்றவை தங்களின் நாடார் ஜாதி பாசம் கருதியோ என்னவோ அவர்களும் சீமானுக்கு அளவு கடந்த ஊடக வெளிச்சம் கொடுக்கிறார்கள்!
எல்லாவற்றிலும் மேலாக முற்போக்கு பெண் உரிமையாளர்களோ மறந்து போயும் சீமான் மீது நடிகை விஜலட்சுமி கூறும் குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்வதே இல்லை.

புலம் பெயர் சீமானின் ரசிக பட்டாளமோ இதையும் கூட சீமான் அண்ணனின் கெட்டித்தனத்தை பார்த்தீர்களா என்று இறும்பூது எய்துகின்றனர்.

புலம் பெயர் இடது சாரி முற்போக்குகளோ வழக்கம் போல திமுக கோபாலபுரம் என்ற சொற்களை தவிர ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் ..
பாவம் ஏதும் அறியாதவர்கள் .. போகட்டும்  என்று விட்டுவிடலாம் !

ஆனால் அவர்களும்கூட  சீமானின் துணை கொண்டல்லவா தமிழக இந்திய அரசியலை கற்று கொள்கிறார்கள் . அது கொரோனவை விட கொடிய பழக்கமாச்சே ?

தமிழக குடும்பங்களின் ஒழுக்கம் பண்பு பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கும் லட்சுமி ராமக்கிருஷ்ணன் இந்த பொன்னான சந்தரப்பத்தை நழுவ விடலாமோ?
பாலக்காட்டு மாமி பஞ்சாயத்து பண்ணவேண்டியதுதானே ?  ஏனடியம்மா கனத்த மௌனம்?

எங்கே போய்விட்டார்கள் இந்த me too மூஞ்சிகள் ?
சின்மயி கோஷ்டிகள் இதற்காக ஏன்  இன்னும் பள்ளி எழுந்தருளவில்லை?

கருத்துகள் இல்லை: