சிவசங்கர் எஸ்.எஸ் :
முதல்வர் எடப்பாடி ஊர்ல இல்லனா..
அமைச்சர் விஜயபாஸ்கர விட்டுட்டு ரெண்டு நாள் சேலம் போனார். அதுக்குள்ள எத்தனை பிரச்சினை.
மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய கொரோனா இன்றைக்கு 105 பேர தொத்தியிருக்கு..
அப்போ இன்னும் கொரோனாவுக்கு முதல்வர் ஆணையை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லல போல.
நேற்றைக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் சொதப்பினாரு. இதுவரை நின்னுக்கிட்டே பேட்டி கொடுத்தவர நேற்று உக்கார வச்சி பேட்டி கொடுக்க வச்சாங்க. பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டாங்க. அமைச்சர் ஒன்னும் தெரியாத மாதிரி பக்கத்தில் இருந்த மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநரை அப்பாவி மாதிரி பார்த்தார். அவர் இவரை பார்த்தார். பைலை புரட்டினார்.
பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி, "ரேபிட் டெஸ்ட் கிட்டை சத்தீஸ்கர் மாநில அரசு ரூ 377க்கு வாங்கியிருக்கு. தமிழ்நாடு என்ன விலைக்கு வாங்கியது?", என்பது தான். அதற்கு தான் அந்த தடுமாற்றம்.
அப்புறம் சொன்னார்,'' மத்திய அரசும் சீனா கிட்டை தான் வாங்கியிருக்கிறார்கள். நம்ம அரசும் அதை தான் வாங்கியிருக்கு. விலை ரூபாய் 600. அதே விலை தான்". பிரஸ்மீட் முடிவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
இன்றைக்கு(19.04.2020) பிரஸ் மீட்டே நடத்தவில்லை.
முதல்வர் அய்யா மட்டும் இருந்திருந்தா இதை எல்லாம் லெப்ட் கையில் ஹேண்டில் செய்திருப்பார்.
பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு சிம்பிளா பதில் சொல்லி இருப்பார்.
கேள்விகள்:
1. நீங்க சொன்ன மாதிரி கொரோனா இன்றைக்கு மறையலையே?
2. ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் சத்தீஸ்கர் மாநில விலைக்கும், நம் மாநிலம் கொடுத்த விலைக்கும் (600-377) 223 ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. இது ஊழல் இல்லையா?
முதல்வர் ஒரே பதிலில் முடித்திருப்பார்.
" எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்றார். இதெல்லாம் தப்புங்க"
# கொரோனாவே எடப்பாடியிடம் விளையாடாதே !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக