வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஜனாதிபதி செய்யாவிட்டாலும் தற்போது பாராளுமன்றத்தை கூட்டலாம்..! சுமந்திரன் அதிரடி!

லங்கா ஈ நியூஸ் : திகதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அரசியல் யாப்பின்படி தற்போதுள்ள நிலைமை குறித்த உங்கள் கருத்து என்ன?
சுமந்திரன் - "தற்போது இவ்விடயத்தில் நாம் தௌிவாக உள்ளோம். ஜூன் 2ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது. அரசியல் யாப்பின் 70வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடி அற்றது. காரணம் அரசியல் யாப்பில் நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் கழிந்த பின்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் சரத்தில் மற்றுமொரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதுதான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் மீண்டும் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி மார்ச் 2ம் திகதி பாராளுமன்றை கலைத்தார். எனவே ஜூன் 22ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் மாத்திரமே ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகும்."
தேர்தல் தினத்தை ஒத்திவைக்க வாய்ப்பு இல்லையா?
சுமந்திரன் - பாராளுமன்றத்தை கலைக்கவும் ஒத்திவைக்கவும் அரசியல் யாப்பின் 70 (5) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும் என அதில் தௌிவாக கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் படி தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது.
ஆனால் அரசியல் யாப்பை மீறி மார்ச் 2ம் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு தினத்திற்கு தேர்தலை பிற்போட்டதால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் அதிகாரம் அற்றுப் போகிறது. தேர்தலை மூன்று மாதங்களுக்கு நடத்த முடியாமைக்கு உரிய காரணம் உள்ளது. ஜுன் 2ம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளது."
தற்போது ஜனாதிபதி பாராளுமன்றை கூட்ட வேண்டுமா?
சுமந்திரன் - "ஜனாதிபதி பாராளுமன்றை கூட்டாவிட்டாலும் பாராளுமன்றம் கூட முடியும். சுருக்கமாக தௌிவுபடுத்தினால், 2018 நவம்பர் மாதத்தில் பாராளுமன்றை கலைத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் விடுத்தார். ஆனால் அரசியல் யாப்பின் படி அவரது வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடி அற்றதாகியது. அதன்படி பாராளுமன்றை கூட்டுவதற்கான வாய்ப்பு இருந்தது. தற்போதைய நிலையும் அதுதான் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் உத்தரவு செல்லுபடி அற்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதம். தற்போது பாராளுமன்றம் கூட முடியும்.
பாராளுமன்றம் கூடுமா?
சுமந்திரன் - "இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ம் ஆண்டு அரசியல் யாப்புக்கு விரோதமாக பாராளுமன்றை கலைத்த போது மீள பாராளுமன்றை கூட்ட வேண்டிய அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தது. ஆனால் அப்போது உயர் நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம் என சபாநாயகர் அறிவித்தார். அதுபோலவே இம்முறையும் அவ்வாறான நிலை ஏற்படலாம். என்னுடைய நிலைப்பாட்டின் படி பாராளுமன்றை கூட்ட முடியும்.
தற்காலத்தில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் உயர் நீதிமன்றம் செல்ல முடியுமா?
சுமந்திரன் - ஈ முறை மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். கடந்த காலங்களில் இந்த முறை மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் இப்போது உயர் நீதிமன்றுக்கு செல்ல முடியும்.
பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட இடைக்கால நிதி அறிக்கை ஏப்ரல் மாதம் இறுதி வரை மாத்திரமே செல்லுபடியாகும். நீங்கள் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியது போன்று அரசாங்கத்திற்கு நிதி செலவிடும் அதிகாரம் இல்லைதானே?
சுமந்திரன் - அது முற்றிலும் உண்மை. நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றுக்கே உள்ளது. வேறு எந்த நிறுவனத்திற்கும் குறித்த நிதி அதிகாரத்திற்கு சவால் விடுக்க முடியாது.  முழு அதிகாரமும் பாராளுமன்றத்திடம் உள்ளது.
அவசர தருணங்களில் ஜனாதிபதிக்கு நிதி செலவிட முடியும் என சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் நிதி செலவிடுவதற்கான அதிகாரம் மாத்திரமன்றி அரசாங்கத்திற்கு கடன் பெற்றுக் கொள்ளும் கட்டுப்பாடும் இந்த இடைக்கால நிதி அறிக்கை காலாவதியான பின் இல்லாது போகும்தானே?
சுமநந்தரன் - ஆம், இப்போது அரசாங்கத்தால் கடன் பெற முடியாது. ஆனால் இப்போதும் அது நடக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக பாராளுமன்றின் செயற்பாடுகள் என்ன?
சுமந்திரன் - அரசாங்கத்திற்கு மூன்று அங்கங்கள் உள்ளன. அரசியல் யாப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிமன்றம் இந்த மூன்றும் தற்காலத்தில் நாட்டுக்கு மிகவும் அவசியம். நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றிடம் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு தேவையான நிதியை பாராளுமன்றின் மூலம் பெற்றுக் கொள்ள பாராளுமன்றம் வேண்டும். மறுபக்கம் இந்த கொரோான வைரஸை கட்டுப்படுத்த சட்டத்திட்டங்கள் இயற்ற வேண்டும். அதனால் நீதிமன்றம் மிகவும் அவசியம். இதற்கு முன்னர் சட்டமாக அங்கீகரிக்கப்படாத விடயத்தை சட்டம் எனக் கூறி உத்தரவு பிறப்பித்து சட்டமாக காட்ட முயற்சித்தால் அது சட்டமாகாது. எனவே பொதுவாக இக்காலத்தில் பாராளுமன்றுக்கு பாரிய கடமைகள் உள்ளது. அதற்காக பாராளுமன்றம் நிச்சயம் கூட வேண்டும்.
அரசியல் யாப்பின் 70 (5) (அ) சரத்து இதோ
பாராளுமன்றத்தை கலைக்கின்ற ஒரு பிரகடனம், பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேதியை அல்லது தேதிகளை நிர்ணயித்தல் வேண்டும் என்பதோடு அத்தகைய பிரகடனத் தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு பிற்படாத ஒரு தேதியில் கூடுமாறு புதிய பாராளுமன்றத்தை அழைத்தலும் வேண்டும்.
அரசியல் யாப்பின் 70 (5) (இ) சரத்து இதோ
(அ) என்னும் உட்பந்தியின் கீழான அல்லது (ஆ) என்னும் உட்பந்தியின் கீழான பிரகடனம் ஒன்றின் மூலம் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியானது பின்னரான பிரகடனம் ஒன்றின் மூலம் வேறுபடுத்தப்படலாம் ஆயின் பின்னரான பிரகடனத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தேதியானது அத்தகைய மூலப் பிரகடனத் தேதியின் பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிந்தாத ஒரு தேதியாக இருத்தல் வேண்டும்.
தரிந்து உடுவரகெதர
குறிப்பு - இதேவேளை, தற்போதுள்ள அரசியல் யாப்பு சபை அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று கூடுகிறது.

கருத்துகள் இல்லை: