வியாழன், 23 ஏப்ரல், 2020

WHO அமைப்புக்கு அமெரிக்கா உதவி நிறுத்தியது . சீனா மேலதிகமாக வழங்க முடிவு உலக சுகாதார அமைப்புக்கு

Hua Chunying 华春莹 ✔ @SpokespersonCHN China has decided to donate additional $30 million in cash to WHO to support its global fight against #COVID19, in particular strengthening developing countries' health systems. China already donated $20 million in cash to WHO on March 11.
latest tamil newslatest tamil newslatest tamil newsதினமலர் : பிஜிங்: அமெரிக்காவில் கொரோனா புயல் மையம் கொண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதலில் சீனாவைக் குற்றம்சாட்டினார். பின், உலக சுகாதார அமைப்பை குறை சொன்னார். மற்றவர்கள் மீது பழிபோடுவதில் ஒருபடி மேலே சென்று, தற்போதைய பிரச்னைக்கு, முந்தய அதிபர் ஒபாமா அரசு தான் காரணம் என்றும் சொல்லி வருகிறார்.
 இந்நிலையில், கடந்த 13ம் தேதி, 'உலக சுகாதார அமைப்பில், 196 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அந்த அமைப்பின் ஒட்டுமொத்த நிதியில், 15 சதவிகிதம் வழங்குவது அமெரிக்காதான். ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு சாதகமாகச் செயல்படுகிறது. அமெரிக்க இனி அந்த அமைப்பிற்கு நிதி வழங்காது' என்றார்.


'கொரோனா போன்ற பெருந்தொற்று பரவிவரும் சூழலில் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவது மிகவும் தவறானது' என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இன்று (23ம் தேதி) மதியம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'உலக சுகாதார அமைப்புக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக, 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா வழங்க உள்ளது' என, பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, கொரோனா தடுப்பு பணிகளுக்காக உலக சுகாதார அமைப்புக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சீனா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'உலக சுகாதார அமைப்பிற்கு, சீனா தற்போது நிதி வழங்கியிருப்பதை, சீனா - அமெரிக்க மோதலின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டும்' என, சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: