புதன், 22 ஏப்ரல், 2020

ட்ரம்பின் குடியேற்ற விசா அறிவிப்பால் 43,850 கோடி இழந்த இந்திய ஐ டி கம்பனிகள

ட்ரம்ப் ட்விட்ஐடி கம்பெனிகளுக்கு அடிஇந்தியர்கள்விசா கெடுபிடி.outbrain.com : ஒபாமா இருந்த வரை கூடுமான வரை இந்தியா உடனான நட்பை நல்ல முறையிலேயே கொண்டு சென்றது அமெரிக்கா.
ஆனால் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே, இந்தியாவை பல கோணங்களில் சீண்டிக் கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
H-1B விசா தொடங்கி சமீபத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydrochloroquine) மருந்துகளை வாங்கியது வரை எல்லாமே இதற்கு சாட்சி./
ஏற்கனவே அமெரிக்கா வழங்கும் H-1B விசாக்களில் கணிசமான விசாக்களை இந்தியர்கள் (இந்திய ஐடி கம்பெனிகள் வழியாக) தான் வாங்கிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக ஐடி கம்பெனிகளில், இந்தியர்கள் இந்த H-1B விசாவை வைத்துக் கொண்டு தான் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விசா எண்ணிக்கைகளில் கை வைப்பதாகச் சொல்வது, இந்தியர்களுக்கான விசா காலம் நீட்டிப்புகளில் கெடுபிடி செய்வது, விசா வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது என அமெரிக்க அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு பல கொடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்று இந்த குடைச்சல் வேறு ஒரு பரிமாணத்தை எடுத்து இருக்கிறது.

ட்ரம்ப் ட்விட்
"கொரோனா வைரஸ் என்கிற கண்ணுக்குத் தெரியாத எதிரி நம்மை தாக்கிக் கொண்டு இருப்பதாலும், அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதாலும், தற்காலிகமாக குடியேற்றத்தை (Immigration) சஸ்பெண்ட் செய்ய, ஒரு செயல் ஆணையில் (Executive Order) கையெழுத்து இட இருக்கிறேன்" என, இன்று ஒரு ட்விட் போட்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். :


அமெரிக்க அதிபரின் இந்த ட்விட்டைப் பார்த்த உடனேயே, இந்திய ஐடி கம்பெனிகளின் பங்குகள் தட தடவென சரியத் தொடங்கிவிட்டன.
இந்த பங்கு விலை சரிவால் இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கள் சுமாராக 43,850 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறார்கள்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 29,100 கோடி ரூபாய்
இன்ஃபோசிஸ் 8,000 கோடி ரூபாய்
ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் 3,700 கோடி ரூபாய்
விப்ரோ 1,750 கோடி ரூபாய்
டெக் மஹிந்திரா 1,300 கோடி ரூபாய் என மொத்தம் 43,850 கோடி ரூபாயை இழந்து இருக்கின்றன.
மற்ற கம்பெனிகள்
இவை எல்லாம் இந்தியாவின் டாப் கம்பெனிகள் மட்டுமே. இன்னும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ், மைண்ட் ட்ரீ, என்ஐஐடி டெக்னாலஜீஸ் போன்ற கம்பெனிகளின் இழப்பை சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடிக்கு கணக்கு சொல்லலாம். சரி ஏன், அதிபர் ட்ரம்பின் குடியேற்றம் சார்ந்த ட்விட்டுக்கு, இந்திய ஐடி பங்கு விலைகள்

கருத்துகள் இல்லை: