செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குஜராத் -அகமதாபாத் நகரில் 1248 பேர் கொரோனா பாதிப்பு ... மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

வளன்பிச்சைவளன் : அகமதாபாத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1248 
குஐராத்தின் மொத்த பாதிப்பில் 64. 43% 
இந்திய அளவில் குஜராத்1939 தொற்று பாதிப்புடன் மூன்றாம் இடம் கார்பரேசன் மருத்துவ மனைகள் நிறைந்து விட்டது 
ஒன்றிய அரசின் அதிகம் பாதித்த பகுதிகள் பட்டியலில் குஜராத்தோ அகமதாபாத்தோ இல்லை
இந்தியாவின் முதன்மை மாநிலம், மாடல் என்று எல்லாம் வர்ணிக்கப் பட்ட குஜராத் தலைநகர் அகமதாபா த்தில் தொற்று எண்ணிக்கை 1248 ஐ தொட்டு உள்ளது இதை சமாளிக்கும் அளவிற்கு மாநகர சுகாதார மருத்துவ மனை யில் படுக்கை வசதிகளோ மருத்து வர்களோ இல்லை இக்கட்டை சமாளிக்க தற்போது மூன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவிலே அதிகம் தொற்று பாதித்த வரிசையில் குஜராத் மூன்றாம் இடத்தில் 1939 பேர் கண்டறியப் பட்டுள்ளனர் இதில் அகமதா பாத்தில் மட்டும் 1248 பேர் அதாவது ஒட்டு மொத்த குஜராத் பாதிப்பில் 64.43 %.
இவ்வளவு மோசமாக இந்த நகரம் பாதிக்க ப்பட்டதற்கான காரணம் இன்ன மும் அறிவிக்கப் படவில்லை
தமிழக பாதிப்பு பிற்கு தப்லீத் ஜமாத் என்றும் சிங்கிள் சோர்ஸ் என்றும் இன்றளவும் சொல்லப் பட்டு வருகிறது. மேலும் ஒட்டு மொத்த இந்தியா கொரோனா பாதிப்பில் தப்லீத் ஜமாத் மூலம் 30 %என துள்ளியமாக இந்திய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது

அதிகம் பாதித்த பகுதிகள் என நான்கு மண்டல மாக பிரித்து ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைத்து உள்ளது உள் துறை. இதில் அதிகம் பாதித்தது என மும்பை, இந்தூர், ஜெய்பூர் மற்றும் மே. வங்கம் த்தின் கொல்கத்தா, ஹவ்ரா, மிதினாப்பூர் கிழக்கு, 24 பர்கான்ஸ் வடக்கு, டார்ஜிலிங், கலிம்போங் ஜல்பை பகுதி பகுதிகள், மிகவும் மோசமாக உள்ளது எனக் கூறப் பட்டுள்ளது
ஒரு வரியில் மும்பை, இந்தூர், ஜெய்பூர் எனக் கூறும் அறிக்கை மே. வங்கம் பற்றி விலாவாரியாக பேசுகிறது இதில் ஆச்சரியம் என்வென் றால் அதிக பாதிப்பு வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி இதில் வரவில்லை. டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சக கட்டுபாட்டு பகுதி யாகும். அதே போல் அதிகம் பாதித்த பகுதி குஜராத் இதில் இடம் பெறவில்லை. நகரில் அதிக பாதிப்பு அகமதாபாத் இதுவும் இப்பட்டியலில் இல்லை. இங்கு தான் பிரதமர் மோடி நமஸ்தே டிரம்ப் பிப்ரவரி 23 - 25 ல் நடத்தினார் என்பதும் நினைவு கூறத்தக்கது அதிகம் பாதித்த பகுதிகள் முதல் ஆறு இடங்களில் இடம் பெறாத மே வங்கம் இணைக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: