மலைமாளர் :
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 171
பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு தொற்று
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை
கட்டுப்படுத்துவதில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்
முன்னின்று செயல்படுகிறார்கள். அதேபோல் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக
கருதப்படும் பத்திரிகைகள் இந்த இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு
உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்கின்றன.
ரிப்போர்ட்டர்கள் களத்திற்கு நேராக சென்று செய்திகளை சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்களும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய அவலை நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர்கள், போலீசார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரிப்போர்ட்டர், வீடியோ
பத்திரிகையாளர், போட்டோகிராபர் என களத்தில் வேலை செய்த 53 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி செய்து வெளியாகியுள்ளது.
பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக