திங்கள், 20 ஏப்ரல், 2020

மகப்பேற்று தாய்க்கு குருதி வழங்கி காத்த காவலர்

கபிலன் காமராஜ் : விவசாயக் கூலியான ஏழுமலையின் மனைவி
சுலோச்சனாவிற்கு பிரசவ வலி வந்து ரெட்டியாபட்டியிலிருந்து 7கிமீ தூரத்தில் மணப்பாறை மருத்துவமனைக்கு சென்ற பொழுது, அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் அவர்களை பேருந்து நிலையத்தில் சந்தித்த காவலர், தன் பணிநேரம் முடிந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தானே ரத்தம் கொடுத்து இரவு பத்து மணிவரை உடன் இருந்தார்.
இந்தச் செய்தியை கேள்விப்பட்ட மாவட்ட எஸ்பி 1000ரூ, டிஜிபி 10000ரூ பரிசளித்ததும், அதை பெண் குழந்தை பெற்றடுத்த அந்த தம்பதிகளுக்கு கொடுத்துவிட்டார் காவலர் சையத் அபு தாகீர்.
இத்தகைய கடைநிலை காவலர்களை தான் 'சின்ன பசங்க' என நக்கல் செய்து உயர் அதிகாரிகளுடனான தனது பரிச்சயத்தை பயன்படுத்தி மிரட்டி பார்க்கும் இலக்கியவியாதிகள் எத்தனை எளிய மக்களின் வாழ்வோடு கலந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு விஜயகாந்த் படம் பார்க்கும் பொழுது அதில் வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு "ஏம்ப்பா நம்மவூர் போலீஸ் எல்லாம் தொப்பையும் தொந்தியுமா இருக்காங்க ?" என கேட்டதற்கு
"செல்க்சன் வரும் பொழுது, பயிற்சியின் பொழுது, ஆரம்ப பணிக்காலத்தில் எல்லாம் உடற்கட்டுக்கோப்பாக தான் இருப்பார்கள். போகப் போக 12மணி நேர டூட்டி தாண்டியும் வேலை பார்த்து வீடு போய் தூங்கி எழுந்து ரோல் காலுக்கு சரியான நேரத்தில் வந்து நிற்கும் பரபரப்பில் அவர்களுக்கு ஜிம் செல்லவெல்லாம் நேரமிருக்காது.

அதும் ஊரை சுற்றிக் கொண்டே இருக்கும் பணியில் சரியான நேரத்துக்கு சாப்பிடாம, கிடைச்சதை சாப்பிட்டு, சிலசமயம் பந்தபஸ்து பணியில் குடிக்க தண்ணி கூட கிடைக்காம படும் அவதியெல்லாம் யாருக்கு தெரியப் போகுது. அதனால தான் அவுங்க தொப்பையோட இருக்காங்க. அவர்களுக்கான நேரத்தை கொடுத்துட்டு அப்புறமா குறை சொல்லி சினிமா படம் எடுக்கட்டும்" என்றார்.
இதைத்தாண்டி அவர்கள் மேலும் படித்து, தேர்வெழுதி தான் பதவி உயர்வு பெறவேண்டும். அதெல்லாம் செய்தது போக நேரமிருந்தால் அவர்களும் இலக்கியம் படிச்சு எழுதுவாங்க. அப்படி எழுத ஆரம்பிச்சா அவர்களிடம் எழுதுவதற்கு 'இலக்கியவியாதிகள்' எழுத்திடாத ஆயிரமாயிரம் சாமானிய மக்களின் சமூக அவல கதைகள் கொட்டிக்கிடக்கும்.
சோ தர்மர்கள் செய்திடாத அறத்தை இந்த கடைநிலை காவலர்கள் சத்தமே இல்லாமல் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: