tamil.news18.com :
தமிழகத்தில்
அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ
படிப்பிற்கு செல்லும் தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை
வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு
முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய
1,23,078 பேரில், 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில்
31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.
இந்நிலையில்,
அரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி
பெற்றுள்ளனர். அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட்
தேர்வில் பெற்றுள்ளனர் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக்
கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை. தமிழக அரசு
சார்பில் 412 நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்தும் சொற்ப
எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும்
அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக