Vishnupriya R
/tamil.oneindia.com
டெல்லி: சீன எல்லையில் மாயமான விமானம் எங்கே என தகவல் கொடுத்தால் ரூ 5
லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் 5 பயணிகள்
மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம்
பகுதியில் இருந்து கடந்த 3-ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அருணாசலப்
பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் உள்ள சீன எல்லை அருகே தரையிறங்க
இருந்த நிலையில் திங்கள்கிழமை அந்த விமானத்தின் ரேடார் சிக்னல்
துண்டிக்கப்பட்டு விட்டது. 6 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இந்த
விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும் அந்த விமானம் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தில்
பயணம் செய்த 13 பேரில் இருவரது அடையாளம் மட்டுமே தெரிந்தது. ஒருவர்
பஞ்சாப்பை சேர்ந்த மோகித் கார்க், மற்றொருவர் விமானி ஆஷிஷ் தன்வார் ஆகியோர்
இருந்தது தெரியவந்துள்ளது.
விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த நிலையில்
விமானம் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என
விமான படை அறிவித்துள்ளது.
/tamil.oneindia.com
/tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக