Velmurugan P tamil.oneindia.com :
சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்-
வீடியோ
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை
நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக அரசுக்கு அம்மாநில
சிறைத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் சசிகலா ஓராண்டுக்கு முன்பே, அல்லது இந்த ஆண்டு இறுதியில் வெளிவர
வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி
மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4
வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில்
ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல்
செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நான்கு பேரையும் விடுவித்து
தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. இதனை விசாரித்த கொண்டு இருந்த போதே முதல்வராக இருந்த
ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பினை 2017 பிப்ரவரியில் உச்சநீதின்றம்
வழங்கியது. இதன்படி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்
என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரும்
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்று தற்போது இரண்டரை வருடங்களை
நெருங்கிவிட்டது. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை
விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம்
எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டால் அவர் வரும் டிசம்பர் மாதமே வெளிவர
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் சிறை தண்டனை வரும் 2021ம்
ஆண்டு முடிவுக்கு வருகிறது. நன்னடததை அடிப்படையில் அவரை ஓராண்டுக்கு முன்பே
விடுவிக்கலாம்.
இதன்படி முடிவு எடுத்தால் அடுத்த ஆண்டு அவர் விடுதலை
செய்யப்படலாம். ஆனால் இந்த ஆண்டு இறுதியிலேயே விடுதலை செய்யலாம் என
சிறைத்துறை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக