தினத்தந்தி :விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.
பதிவு: ஜூன் 14, 2019 09:26 AM மாற்றம்: ஜூன் 14, 2019 09:54 AM
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு. ராதாமணி.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் திமுக எம்.எல்.ஏ, கே. ராதாமணி காலமானார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக