tamil.oneindia.com - mathivanan-maran.:
கோவை:
இலங்கையில் ஈஸ்டர் நாளில் தாக்குதல்கள் நடத்திய தற்கொலைப் படையினருடனான
தொடர்புகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 7
இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி
வருகின்றனர்.
இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.v> இத்தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு ஏஜென்சி எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது. கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கைக்கு சென்ற இந்திய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், சஹ்ரான் குழுவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். மேலும் இலங்கையிலும் அந்த குழு விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இலங்கை தாக்குதல்கள் தொடர்பாக கோவையில் அன்புநகர் உட்பட 7 இடங்களில் இன்று புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சஹ்ரான் நடத்தி வந்த தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினரும் கோவை சந்தேக நபர்களுக்குமான தொடர்புகளை உறுதி செய்த பின்னர் இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக