அதன்பேரில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கத்தை விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். மாதவரம் இன்ஸ்பெக்டர் ஜவஹர், சப்-இன்ஸ்பெக்டர் ஆன்ட்ரின் ரமேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஜுன் 3-ம் தேதி காலையில் நெல்லையைச் சேர்ந்த நாராயணனின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டது.
இந்தச் சம்பவமும் அதே இடத்தில் நடந்ததால் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மர்ம உறுப்புகளை அறுப்பது சைக்கோ கில்லர் என போலீஸார் கருதினர். நாராயணனிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் சைக்கோ கில்லர் குறித்து முக்கிய தகவல் தெரியவந்தது.
அப்போது நாராயணன், என்னுடைய இந்த நிலைமைக்கு இவர்தான் காரணம் என்று கூறினார்.
ஆனால், அவருக்கு அந்த நபர் குறித்த
விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து வெள்ளை நிறச் சட்டை, வேட்டி அணிந்தவரின்
புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு தனிப்படை போலீஸார் ஒவ்வோர் இடமாக
தேடினர்.
சில தினங்களுக்கு முன், ராஜமங்கலம் காவல்
நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே
சப்-இன்ஸ்பெக்டர் ஆன்ட்ரின் ரமேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் தலையில் சிலர் அடித்துள்ளனர். அதுதொடர்பாக சிலரை கைதுசெய்துள்ளோம்.
மர்ம உறுப்புகளை அறுத்த நபர் குறித்து
எந்தத் துப்பும் துலங்காத நிலையில் அவரை எளிதில் கண்டறிவது தொடர்பாக
உயரதிகாரிகளிடம் ஆலோசித்தோம்.
அப்போது, இந்த நபரின் புகைப்படத்தை மீடியா மூலம் தெரியப்படுத்தினால் எளிதில் பிடித்துவிடலாம் என்று தனிப்படை போலீஸார் கூறினர்.
அதற்கு உயரதிகாரிகளும் சம்மதம்
தெரிவித்தனர். அதன்படி நேற்று அந்த நபரின் புகைப்படம், சிசிடிவி காட்சிகள்
மீடியாக்களுக்கு அனுப்பி வைத்தோம்.
உடனடியாக புகைப்படம், வீடியோவுடன்
செய்திகள் வெளியாகின. செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே வெள்ளை நிறச்
சட்டை, வேட்டி அணிந்தவரை வில்லிவாக்கத்தில் பார்த்ததாக தனிப்படை
போலீஸாருக்கு போனில் தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்று மர்ம உறுப்புகளை அறுத்த முனுசாமியைப் பிடித்துவிட்டோம்” என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “முனுசாமி, மீன்கடையில் வேலை பார்த்துவருகிறார்.
சிறுவயது முதல் தன்பாலின சேர்க்கை
பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். அவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்
திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருப்பினும் அந்தப்பழக்கத்திலிருந்து முனுசாமி விடுபடவில்லை. வேலை முடிந்ததும் மதுஅருந்தும் முனுசாமி, சம்பவ இடத்துக்கு வருவார்.
அப்போது அவ்வழியாகச் செல்பவர்களிடம்
முதலில் பேசுவார். தன்பாலினச் சேர்க்கைக்கு வெளிப்படையாகவே முனுசாமி
அழைப்பார். அதற்கு சம்மதிப்பவரை அழைத்துக் கொண்டு மறைவான இடத்துக்குச்
செல்வார் முனுசாமி.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டால் கத்தியை எடுத்து மர்ம உறுப்பை அறுத்துவிட்டு தப்பிவிடுவார்.
இப்படிதான் அஸ்லாம் பாஷாவும் நாராயணனும்
முனுசாமியிடம் சிக்கியுள்ளனர். தற்போது அஸ்லாம் பாஷா இறந்துவிட்டதால்
முனுசாமி மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்துள்ளோம்”
என்றார்.
முனுசாமி
போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “மானாமதுரையில் நான் வசித்தபோதுதான்
நண்பர்கள் மூலம் இந்தப்பழக்கத்துக்கு நான் அடிமையானேன்.
அதன்பிறகு அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. வேலை தேடி சென்னை வந்தேன்.
மீன் கடையில் வேலை பார்த்தேன். தனிமையில் இருந்த நான், மது அருந்தியதும் தன்பாலின சேர்க்கைக்கு ஆள்தேடுவேன்.
என்னோடு ஒத்துழைப்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால், ஒத்துழைக்காதவர்களைத்தான் அப்படி செய்வேன்” என்று கூறியுள்ளார்.
தன்பாலின சேர்க்கை விவகாரத்தில் முனுசாமி கைதான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக