செவ்வாய், 11 ஜூன், 2019

கிருஷ்ணசாமி, ராமதாஸ், சீமான், ரஞ்சித் போன்றவரக்ள் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை நோக்கி ... ?

Ganesh Babu : ஒருப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் காலூன்ற வேண்டு மென்றால் அவர்களின் முதல் வேலை அந்தச் சமூகத்தை துண்டு துண்டாக
உடைப்பதாகத்தான் இருக்கும். நீங்கள் இப்போது சமீப ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் காலூன்றிய எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்து ஆராய்ந்துப் பாருங்கள். அங்குள்ள சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் பணியை அவர்கள் 10-15ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருப்பார்கள்.
சமூகத்தை உடைப்பது என்றால் பார்ப்பனரல்லாத மக்களை ஒன்று சேரவே முடியாதத் தனித்தனி தீவுகளைப் போல மாற்றுவதும்,
அதற்கு தேவையான பகையுணர்ச்சியைத் தொடர்ந்து தீமூட்டும் வகையில் சின்னச் சின்ன புதிய ஆளுமைகளை காசுக் கொடுத்து வளர்த்துவிடுவதும்தான் அவர்களின் வேலைத்திட்டம்.
தமிழகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் ராமதாஸ், சீமான், ரஞ்சித் உள்ளிட்டவர்களை இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறது என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்துக்கொள்ளமுடியும்.
ஆர்.எஸ்.எஸின் இந்த உடைக்கும் போக்கிற்கு நேர்மாறாகப் பயணித்தது நம் திராவிட இயக்கம். இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் பார்ப்பனரல்லாதவர்கள், சிறுபான்மையினர் என்று அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி சமூகநீதி அரசியலை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் அணித்திரட்டலை நடைமுறையில் படைத்துக்காட்டியதுதான் திராவிட அரசியலின் தலையாய சமூகப் பணிகளுள் ஒன்று.
இனிவரும் காலங்களில் பார்ப்பன ஆர்.எஸ்.எஸின் இந்த 'உடைப்பு அரசியலை', திராவிட இயக்கத்தின் 'படைப்பு அரசியல்' எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பதில்தான் இந்நாட்டின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது!

கருத்துகள் இல்லை: