புதன், 29 மே, 2019

ராகவா லாரன்ஸ் படத்துக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகாதீங்க .. ஆபாசம் மூட நம்பிக்கை .....

Hema Sankar : பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தயவு செய்து ராகவா லாரன்ஸ் படத்தை குடும்ப பொழுது போக்கு படம்னு( Family entertainer ) குழந்தைங்கள கூட்டிட்டு போகாதீங்க.
காஞ்சனா -3 ல எவ்ளோ ஆபாசமான காட்சிகள், வசனங்கள் , மூட நம்பிக்கை திணிப்பு.
இது குழந்தைகளுக்கான படமே இல்ல. நியாயமா இந்த மாதிரி படத்துக்கு ஏ சர்டிவிக்கேட் தான் தரனும். இது போல தமிழ் சினிமால நிறைய ஸ்டார் படம்னு சொல்ல கூடியவர்கள் படத்துலையும் வன்முறை, வக்கிரம், ஏ கண்ட்டண்ட் இருந்தாலும் சென்சார் ‘ஏ’ குடுக்கறது இல்ல.
தயவு செஞ்சு உங்க குழந்தைங்களோட குழந்த தன்மைய இப்டி பட்ட மட்டமான கதைகளமே இல்லாத, சும்மா ஹீரோ புகழ் பாடும், ஹீரோ பின்னாடியே அலையற மாதிரி, இல்ல காதல் என்ற பெயரில் பெண்ணை stalking செய்யற, பழைமைவாதம், முட்டாள் தனமான, லாஜிக் இல்லாத படங்களுக்கு கூட்டிச் சென்று பாழ் பண்ணாதீங்க.
கடைசியா ராகவா லாரன்ஸ் ..எல்லா வியாக்கியானமும் பேசறீங்க, ஆனா அறிவுனு ஒன்னு இருக்கா..நீ எடுக்கற படத்துக்கு ‘யூ’வாங்கி கூட்டம் கூட்டமா குழந்தைங்கள வர வைக்கற சரி, படத்துல நீ குஜாலா இருக்க, இவ்ளோ வக்கிரமான காட்சிகள், வசனங்கள் தேவையா.. கலக்‌ஷனுக்காக எது வேணும்னாலும் பண்ணுவீங்க, ஆனா வெளியில பெரிய தியாகி, ஊர்ல அவர் மட்டும் தான் உத்தமன் மாதிரி பில் டப் வேற.
காஞ்சனா -3 ல ரொம்பவே அதிகம், அதுவும் 3 ஹீரோயிகள எப்டி கீழ் தரமா அவன் பின்னாடியே அலையற மாதிரி, ஆபாச டபுள் மீனிங் வசனங்கள்.சம்மர் லீவ்ல படத்த விட்டு குழந்தைங்க எல்லாரையும் வர வைக்கறது வியாபார யுக்தினா அதுல கொஞ்சமாவது நேர்மை இருக்க வேணாமா.. இதுக்கு எப்டி தான் யூ தராங்களோ

கருத்துகள் இல்லை: