வெள்ளி, 31 மே, 2019

மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள்- முழு விபரங்கள்

tamil.samayam.com :டெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித் ஷாவுக்கு உள்துறையும், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரானார் அமித் ஷா, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு</ 17வது மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய அரசு நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து, 24 இணையமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் 21 புதுமுகங்களுக்கு மோடி வாய்ப்பு அளித்துள்ளார். அவர்களில் 6 பேருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பும், 14 பேருக்கு இணையமைச்சர் பொறுப்பும், ஒருவருக்கு தனிப் பொறுப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை பட்டியல்

தற்போது மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இலாக்கள் ஒதுக்கபப்ட்டுள்ளன. அதில் பெரிது எதிர்பார்ப்பிற்கிடையில் அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 16வது மக்களவையின் உள்துறை அமைச்சகத்தை கவனித்து வந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னர் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ஜவடேகருக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒலிப்பரப்புதுறை அமைச்சகம், நிதின் கட்கரிக்கு சாலை போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை பட்டியல்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உ.,பி அமேதி தொகுதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு குழந்தை வளர்ச்சி, மகளிர் நலத்துறை மற்றும் ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



தர்மேந்திர பிரதானுக்கு பெட்ரோலியத் துறை, அர்ஜுன் முண்டாவுக்கு பழங்குடியினர் நலத்துறை, கிரண் ரிஜ்ஜூவுக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை, ஒடிசாவின் மோடி எனப்படும் பிரதாப் சந்திர சாரங்கிக்கு சிறு-குறு,



கர்நாடகத்தை சேர்ந்த சதானந்த கவுடாவுக்கு ரசாயணம் உரத்துறை, ரவிசிங்கர் பிரசாத்துக்கு சட்டம், தகவல் தொழில்நுட்பம் துறை, நரேந்திர சிங் தோமருக்கு விவசாயம், ஹர்ஷ்வர்தனுக்கு சுகாதாரம், ரயில்வே துறை, வர்த்தகம் பியூஷ் கோயல் , சந்தோஷ் குமாருக்கு தொழிலாளர் நலன், ரமேஷ் பொக்ரியால் மனிதவளம், முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள்- முழு விபரங்கள்

பிரதமர் நரேந்திர மோடி- பணியாளர் நலன், அணுசக்தி, விண்வெளி, கொள்கை சார்ந்த விவகாரங்கள்.

ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு

அமித் ஷா- உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு

நிர்மலா சீதாராமன்- நிதியமைச்சகம் ஒதுக்கீடு

அமித் ஷா- உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு

நிர்மலா சீதாராமன்- நிதியமைச்சகம் ஒதுக்கீடு

நிதின் கட்கரி- சாலை போக்குவரத்துறை ஒதுக்கீடு
சுப்பிரமணியம் ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை ஒதுக்கீடு

பியூஷ் கோயல்- ரயில்வே, வர்த்தம் மற்றும் தொழில்துறை ஒதுக்கீடு

ரவிசங்கர் பிரசாத்- சட்டம், மின்னணு, தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு

தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியத் துறை ஒதுக்கீடு

பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனத்துறை ஒதுக்கீடு

ஸ்மிருதி இரானி- பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு- ஜவுளித்துறை ஒதுக்கீடு

சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கீடு

முக்தர் அப்பாஸ் நக்வீ- சிறுபான்மையினர் நலத்துறை

நரேந்திர சிங் தோமர்- வேளாண்துறை, ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறைகள் ஒதுக்கீடு

முரளிதரன்- வெளியுறவுத்துறை இணையமைச்சர் பொறுப்பு

பிரதாப் சந்திர சாரங்கி- சிறு-குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன்வளத்துறை ஒதுக்கீடு

ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஒதுக்கீடு (தனிப்பொறுப்பு)

கிரண் ரிஜ்ஜூ- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு (தனிப்பொறுப்பு)

கஜேந்திர சிங் செகாவத்- ‘ஜல் சக்தி’துறை ஒதுக்கீடு

அர்ஜுன் முண்டா- பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கீடு

ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு

தாவர் சந்த் கெலாட்- சமூகநீதி மற்றும் மேம்ப்பாட்டுத்துறை

ஹர்ஷவர்தன்- சுகாராத்துறை ஒதுக்கீடு

பிரகலாத் ஜோஷி- நிலக்கர் மற்ற்ம் சுரங்கத்துறை ஒதுக்கீடு

முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலன் துறை ஒதுக்கீடு

மத்திய இணையமைச்சர்களான துறைகள்:
கிஷண் ரெட்டி- உள்துறை இணையமைச்சர் பொறுப்பு

ராம்தாஸ் அத்வாலே- சமூகநீதி மற்றும் மேம்பாடு

அனுராக் தாகூர்- நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரம்

அங்காடி சுரேஷ் சென்னபசப்பா- ரயில்வே இணையமைச்சர்.

பர்ஷோத்தம் ரூபாலா- வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலன் துறை ஒதுக்கீடு

ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு, பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளித்துறை (தனிப்பொறுப்பு)

பிரகாத் சிங் பட்டேல்- சுற்றுல்லாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை ஒதுக்கீடு (தனிப்பொறுப்பு)

ராஜ்குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்தி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை (தனிப்பொறுப்பு)

ஹர்தீப் சிங் பூரி- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, விமானப் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை. (தனிப்பொறுப்பு)

கருத்துகள் இல்லை: