வெள்ளி, 31 மே, 2019

நெல் ஜெயராமனைக் குறித்து எழுதப்பட்டவை மிகைபடுத்தப்பட்ட பொய்களாகும்!

சாவித்திரி கண்ணன் : இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை கண்டெடுத்ததில் ஜெயராமனைக் குறித்து எழுதப்பட்டவை மிகைபடுத்தப்பட்ட பொய்களாகும்!
தமிழகத்தில் சுமார் 160க்கு மேற்பட்ட நெல்ரகங்களை கண்டெடுத்தது ஜெயராமன் என்ற ஒற்றை நபரல்ல.
அவருக்கு முன்பும்,அவரது சமகாலத்திலும் இதில் தங்களை அர்பணித்தவர்களின் பட்டியலை நானறிந்த வகையில் பட்டியலிடுகிறேன்.

தஞ்சை கோ.சித்தர்,உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்,நாகர் கோயில் பொன்னம்பலம்,பரமக்குடி துரைசிங்கம்,மதுராந்தகம்ஜெயச்சந்திரன்,மயிலாடுதுறை ரங்கநாதன்.,புதுக் கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனம்,குடும்பம் தொண்டு அமைப்பினர்..உள்ளிட்ட பலரையும் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரையும் இருட்டடிப்பு செய்வது போல ஜெயராமனை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
நான் சொல்வது இயற்கை வேளாண்மை களத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஏனெனில்,தமிழகத்தில் இயற்கை வேளாண்மை புரட்சியை பட்டி தொட்டியெங்கும் அலைந்து முன்னெடுத்து அதை ஒரு மக்கள் இயக்கமாக்கியவர் நம்மாழ்வார்.
அவர் அரசாங்கங்களின் பல மக்கள் விரோத செயல்களை கடுமையாக விமர்சித்தவர். குறிப்பாக மீத்தேன் திட்டத்திற்கு எதிராக களமாடியவர். ஆனால்,தன்னை நம்மாழ்வாரின் சீடனாக சொல்லிக் கொண்ட நெல் ஜெயராமனோ மக்கள் விரோத அரசு திட்டங்களில் அமைதி காத்தவர்.
ஆகவே, நம்மாழ்வாரை பின்னுக்கு தள்ளூம் நோக்கத்துடன் ஜெயராமனுக்கு இல்லாத முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துகிறது அதிகார வர்க்கம்!.
காந்தியை பின்னுக்கு தள்ளி பட்டேலை முன்னெடுத்தது போல!
கல்வி பாடத் திட்டத்தில் உண்மையில் சொல்லப்பட வேண்டியது நம்மாழ்வாரையும்,பாரம்பரிய நெல் ரகங்களைகண்டெடுப்பதில்,பரப்புவதில்,பயிரிடுவதில் தமிழகம் தழுவிய அளவில் நடக்கும் பல உன்னதமான செயல்பாடுகளையும் தான்!

கருத்துகள் இல்லை: