புதன், 29 மே, 2019

’Wait and See’-மு.க.ஸ்டாலின்..

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் விலகினார். சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி காலியானதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
s
நக்கீரன் :இன்று (28-05-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: செய்தியாளர்: தற்போது 101 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை மிகுந்த எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கின்றது. இதன்பிறகு உங்களின் செயல்பாடு சட்டப்பேரைவையில் எந்த மாதிரி இருக்கும்?
 ஸ்டாலின்: சட்டமன்றம் கூடுகின்ற போது நாங்கள் எப்படி செயல்படுகின்றோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்கப் போகின்றீர்கள். அதைத்தான் நீங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் போகின்றீர்கள். செய்தியாளர்: சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.
அந்த நம்பிக்கையில்லாத தீர்மானம், சபாநாயகர் மீது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மீண்டும் உறுதியாக இருக்கின்றீர்களா?
ஸ்டாலின்: Wait and See. பொறுத்திருங்கள். திரையில் காட்சிகள் வரும்.
செய்தியாளர்: நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசிற்கு எதிரான தீர்மானமான, நம்பிக்கை வாக்கெடுப்பை தி.மு.க முன்னெடுக்குமா?
ஸ்டாலின்: சட்டமன்றத் தேதி இன்னும் அறிவிக்கவில்லை, அறிவித்ததற்குப் பிறகு அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம்

கருத்துகள் இல்லை: