புதன், 29 மே, 2019

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா


US removes India from its currency monitoring list; China, Japan stay
தீக்கதிர் : அமெரிக்காவின் கருவூலத்துறை, உலகம் முழுக்க உள்ள சில முக்கிய நாணயங்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நாட்டின் நாணயத்தையும், அதன் சர்வதேச மதிப்பை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்நிலையில், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளின் பெயர்களை நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா வைத்துள்ளது.
அமெரிக்காவின் சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இந்தியா நாணய மதிப்பை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், கோட்பாடுகளும் ஏற்புடையதாக இல்லாததால், இந்தியாவின் பெயர், நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: