ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே
விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில்
விமர்சித்தார்.
அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார். ராகுலின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம், அசோக் கெலாட் இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று போபால் திரும்பிய மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
ராகுலின் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் அளித்துள்ள மறுப்பு தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக