சனி, 1 ஜூன், 2019

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டாகும் #TNAgainstHindiImposition!!zeenews.india.com/tamil :சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது இந்தி எதிர்ப்பு. சமூக வலைத்தளங்களில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகி வருகிறது இந்தி எதிர்ப்பு.
மத்திய அரசு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை 2019-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான வரைவை தயாரிக்கும் பணியல் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. புதிய கல்வி கொள்கை வரைவில், மும்மொழிக் கல்வி கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த மும்மொழி கொள்கையானது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம், வேறு இந்திய மொழி என்பதாகும். இதில், இந்தியைத் தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், ஏதேனும் இந்திய மொழிகளில் இந்தியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தி திணிப்புக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன. இதை எதிர்த்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரண்ட்டாகி 3-வது இடத்தைப் பிடித்தது.

கருத்துகள் இல்லை: