வெள்ளி, 31 மே, 2019

ஆண்மையில்லாத்தனம்: இளையராஜாவுக்கு 96 பட இசையமைப்பாளர் பதில்

Ilaiyaraja issue: 96 movie music director responds Siva- tamil.filmibeat.com : 96 Movie: ஆண்மையில்லாத்தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-
சென்னை: ஆண்மையில்லாத்தனம் சர்ச்சை குறித்து வீடியோ மூலம் இளையராஜாவுக்கு பதில் அளித்துள்ளார் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.
பிற இசையமைப்பாளர்கள் தங்களின் படங்களில் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த பேட்டியை பார்த்த இளையரஜா ரசிகர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. தயவு செய்து நீங்கள் இசை மூலம் மட்டுமே பேசுங்கள், பேட்டிகள் கொடுக்க வேண்டாம்.
பேட்டிகள் மூலம் உங்களின் பெயர் கெடுகிறது என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திய 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கோவிந்த் வசந்தா தளபதி படத்தில் வரும் கண்மணி கண்ணால் ஒரு சேதி பாடலின் இசையை வாசிக்கிறார். தான் என்றுமே இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார் அவர்.
இதற்கிடையே முறைப்படி ராயல்டி கொடுத்துவிட்டு தான் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதாக 96 படக்குழுவை சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் அவர் இளையராஜாவை லைட்டாக கலாய்த்தும் இருந்தார். அவர் இளையராஜாவை கலாய்த்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் பார்த்து பேசுங்க மேடம், அவர் ஒரு இசை மேதை என்பது நினைவில் இருக்கட்டும் என்றார்கள் இளையராஜா ரசிகர்கள்.
கான்டிராக்டர் நேசமணி ஒரு வகையில் இளையராஜாவை காப்பாற்றிவிட்டார் என்றே கூற வேண்டும். நேசமணி டிரெண்டாகும் முன்பு வரை நெட்டிசன்கள் இளையராஜாவை விளாசியும், கலாய்த்து மீம்ஸ் போட்டும் நேரத்தை ஓட்டினார்கள்.
நேசமணி வந்ததும் இளையராஜாவை மறந்துவிட்டு கான்டிராக்டருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவுக்கு இணை அவரே தான். இந்நிலையில் அவர் பிற இளம் இசையமைப்பாளர்களை தாக்கிப் பேசுவது ரசிகர்களை வருத்தம் அடையச் செய்கிறது. இளையராஜா ஆதங்கத்தில் வார்த்தைகளை விட்டுவிடுகிறார். அது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் அவரை சகட்டுமேனிக்கு விளாசுகிறார்கள்.
ராயல்டி பிரச்சனை குறித்து இளையராஜா எது சொன்னாலும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் ராய்லடி விவகாரத்தால் பிரிந்து மீண்டும் இளையராஜாவுடன் சேர்ந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தையும் விளாசுகிறார்கள். ஏன் சார், மறுபடியும் அவருடன் போய் சேர்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: