திங்கள், 27 மே, 2019

வன்னியர் சாதி வெறி ..கவுண்டர் சாதி வெறி தேவர் சாதி வெறி அதே அளவு தவறானது தலித் சாதி வெறி ..

A Sivakumar : பாஜகவுக்கு நேரடியாக மடைமாற்ற முடியாத தலித் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் அழைத்து, காங்கிரசில் இருந்து பிரித்து, தற்போது திட்டமிட்டபடியே இந்துத்துவாவுக்கே அதாவது பாஜகவுக்கே கொண்டு சென்றாகிவிட்டது.
வடக்கில் சாத்தியமானதை தான் நம்ம ரஞ்சித்தை வைத்து இங்கே அடிக்கடி முயல்கிறார்கள்.
ஆனால் பாவம் அது ஒரு அடி கூட முன்னேறாமல் இருக்கிறது.
அவரும் என்னென்னெவோ குட்டிக்கரணம் அடித்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. ஒருவேளை ரஜினிக்காக காத்திருக்கலாம்.
இடையில் தேர்தல் வந்துவிட, 38 தொகுதியில் அது நடந்தாலும் அவர் கண்ணுக்கு திருமாவளவன் மட்டும் தெரிந்தார். ரவிக்குமார் கூட இல்லை, ஏன்னா அவர் திமுக வேட்பாளர் என்பதால் FC ஆகிவிட்டார்.
திருமாவளவன் நின்றதோடு மட்டுமல்லாமல் வென்று வேறு தொலைத்துவிட்டார்.
பொறுக்குமா நம்ம ரஞ்சித்ஜிக்கு?
உள்ளத்தில் இருக்கும் மொத்த விகாரத்தையும் காட்டும் வண்ணம் திருமாவளவன் தலித் என்பதால் தான் வெற்றி பெற போராடுகிறார் என்று ஒரு Tweet போட்டார்.
பாவம் திருமாவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியின் விளிம்பு வரை சென்றவரும் தலித் தான் என்பதும், திருமா வெறும் தலித் வாக்குகள் மட்டுமல்லாமல் பொது சமூகத்தின் அதாவது SC அல்லாத BC, MBC வாக்குகளையும் திமுகவின் தொடர் முயற்சியாலும், உழைப்பாலும் வாங்கி தான் வெற்றி பெற்றார் என்பதையும் கூட புரிந்துகொள்ள முடியாத முற்போக்கு மூளைவீங்கி தான் நம்ம ரஞ்சித்ஜி.
ஆக வடநாட்டு காவி பணத்தில் தமிழகத்தில் ரஞ்சித் நடத்த நினைக்கும் ஜெய்பீம் யானைகளின் ஊர்வலத்துக்கு திராவிட இயக்கங்கள், திமுக & விசிக பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
2019 தனித்தொகுதி புள்ளிவிவரங்கள்

மொத்த தனித்தொகுதிகள்
131
தாழ்த்தப்பட்டோருக்கானவை (SC):
84
பழங்குடி யினருக்கானவை (ST):
47
அதில் வெற்றிபெற்ற கட்சிகளின் விவரம்:
பாஜக:
77 (46 SC +31 ST)
காங்கிரஸ்:
9 (5 SC + 4 ST)
திமுக:
5 SC
விசிக:
2 SC
திரிணாமுல்:
5 SC
பகுஜன் சமாஜ்:
2 SC
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வன்னியர் சாதி வெறி எப்படி தவறோ,
கவுண்டர் சாதி வெறி எப்படி தவறோ,
தேவர் சாதி வெறி எப்படி தவறோ,
அதே அளவு தவறானது தான் தாழ்த்தப்பட்டோர் இடையே யானைகள் விதைக்க முயலும் சாதி வெறி.
யானைகள் தங்கள் பாதையில் இருக்கும் வெள்ளாமை முழுவதையும் அழித்துவிடும் என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நலம்.

கருத்துகள் இல்லை: