சனி, 16 மார்ச், 2019

மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்

tamil.oneindia.com  -  hemavandhana. கோவை: "நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை சீரழிச்சோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார்.
இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது" என்று கைதான திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்திருக்கிறான்.
400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்த தகவல்களாக இவை கூறப்படுகின்றன.
திருநாவுக்கரசு கூறியதாவது : "என் அப்பா வட்டிக்கு பணம் தர்ற தொழில் செய்றார். எங்களுக்கு 5 ஏக்கரில் பண்ணை இருக்கு. எனக்கு என் வீட்டில் ரொம்ப செல்லம். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவாங்க. அதனால் இஷ்டத்துக்கு பைக், கார்னு சுத்தி வந்தேன். எங்க கேங் ரொம்ப பெரிசு. அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், உள்பட 20 பேர் அதில இருக்கோம். எல்லாருமே அதிமுகக்காரங்கதான். ஒன்னா தண்ணி அடிப்போம், எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் செஞ்சோம்.
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்ட பார் நாகராஜ் கட்சியில கடுமையா உழைச்சி மேல வந்தார்.
பொள்ளாச்சி விஐபிதான் அவருக்கு பார் நடத்த பர்மிஷன் வாங்கி தந்தார். காலங்காத்தால 6 மணிக்கே நாகராஜ் பாரை திறந்திடுவார்.
போலீசும் இதை கண்டுக்காது. அவருக்கு போலீஸ் நெருக்கமானாங்க. அவர் மூலமாக எங்களுக்கும் போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அதனால தப்புக்கு மேல தப்பு செய்ய ஆரம்பிச்சோம்.
பெண் டாக்டர் இதில பெண்கள் சமாச்சாரமும் அடங்கும். முக்கியமா பேஸ்புக்கில் லேடீஸ் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்தோம். அதனாலதான் எங்களால் நிறைய பெண்களை எங்க பக்கம் சாய்ச்க முடிஞ்சது. இப்படித்தான் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டர்கிட்ட ஏமாத்தி ஒன்றரை கோடி ரூபாய் ஏமாத்தினோம்.


பணம் கொட்டியது நிறைய பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதிச்சோம். வட்டிக்கு பணம் தர்ற தொழிலை விடஇதில எங்களுக்கு பணம் கொட்டியது. எங்க குரூப்ல எல்லாருமே இந்த தொழிலைதான் செஞ்சோம். எங்களை மாதிரியே இதே மாதிரி தொழிலை செய்தவர்தான் சிவில் இன்ஜினியர் சபரிராஜன். 60 பெண்கள் இந்த விஷயம் எங்களுக்கு லேட்டாதான் தெரிஞ்சது. அதனால அவரை எங்கள் காரில் தூக்கி போட்டு கொண்டு வந்து அடித்து உதைத்தோம். அவர்கிட்ட இருந்து செல்போன்களை பிடுங்கி பார்த்தோம். ஷாக் ஆயிட்டோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி நாசமாக்கி இருக்கோம்.

ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார். சபரிராஜன் அதனால அந்த வீடியோ எல்லாத்தையும் எங்க செல்போன்லயும் பதிவு பண்ணிக்கிட்டோம். அதில இருக்கிற பெண்களை குறி வைத்தோம். அந்த பொண்ணுங்க கிட்ட சபரிராஜனை பேச சொல்ல, அவரும் அந்த பெண்களிடம் பேசி எங்கள் பண்ணை வீட்டுக்கு வரவழைத்துவிடுவார்.

அங்கு இந்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி காட்டி ஜாலியாக இருப்போம். அடித்தோம் யார் எல்லாம் முரண்டு பிடித்தார்களோ அவர்களைதான் நாங்கள் அடிச்சோம். எங்கள் கும்பலில் உள்ள ஒருத்தனின் தங்கையை சபரிராஜன் லவ் செய்தான். ஆனா அந்த பெண்ணையும் நண்பனுக்கு தெரியாமல் பண்ணை வீட்டுக்கு சபரி மூலமாகவே நாங்கள் வரவழைத்தோம்.

கடைசியில், அந்த பெண் வீட்டில் போய் நண்பனிடம் எங்களை காட்டி கொடுத்துவிட்டாள். மாட்டிக்கிட்டோம் அதனால ஆத்திரமான என் நண்பன், சொந்தக்காரங்களை கூட்டி வந்து எங்களை எல்லாம் தூக்கி கொண்டு போய் அடித்தான். எல்லோரும் சேர்ந்து செல்போனை பிடுங்கி கொண்டனர். போலீசில் கொண்டு போய் தந்துவிட்டனர். இப்படித்தான் நாங்க மாட்டிக்கிட்டோம்" என்றான்

கருத்துகள் இல்லை: